Published:Updated:

`சரணடைந்தது தாக்குதல் வழக்கில், கைதானது பொள்ளாச்சி பாலியல் வழக்கில்!' - மணிவண்ணனுக்கு கிடுக்கிப்பிடி

எம்.புண்ணியமூர்த்தி
`சரணடைந்தது தாக்குதல் வழக்கில், கைதானது பொள்ளாச்சி பாலியல் வழக்கில்!' - மணிவண்ணனுக்கு கிடுக்கிப்பிடி
`சரணடைந்தது தாக்குதல் வழக்கில், கைதானது பொள்ளாச்சி பாலியல் வழக்கில்!' - மணிவண்ணனுக்கு கிடுக்கிப்பிடி


``பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மணி என்கிற மணிவண்ணனுக்கும் பாலியல் விவகாரத்தில் தொடர்பு உள்ளதாகக்கூறி அவரை சி.பி.சி.ஐ.டி போலீஸ் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட  நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி தீவிரமாக விசாரித்து வந்தது. இந்நிலையில், பாலியல் வழக்கு தொடர்பாக புகார் தெரிவித்த கல்லூரி மாணவியின் அண்ணனைக் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்கிற மணிவண்ணன் கடந்த மாதம் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மணிவண்ணனை கஸ்டடியில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிவண்ணனுக்கும் பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து  மணிவண்ணனை பாலியல் புகாரில் கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை விசாரித்த நீதிபதி 
நாகராஜ் வருகின்ற 23-ம் தேதி வரை மணிவண்ணனை நீதிமன்றக் காவலில் வைக்க  உத்தரவிட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரைத் தவிர யாரும் குற்றவாளிகள் இல்லை என்று லோக்கல் போலீஸார் சொல்லிவந்த நிலையில், மேலும், ஒருவருக்கு தொடர்பிருப்பதாக சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.