Published:Updated:

மதுரை சித்திரைத் திருவிழா கூட்டத்தில் புகுந்த திருடர்கள்!- பெண்களிடம் 38 சவரன் நகை கொள்ளை

மதுரை சித்திரைத் திருவிழா கூட்டத்தில் புகுந்த திருடர்கள்!- பெண்களிடம் 38 சவரன் நகை கொள்ளை
மதுரை சித்திரைத் திருவிழா கூட்டத்தில் புகுந்த திருடர்கள்!- பெண்களிடம் 38 சவரன் நகை கொள்ளை

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது அதன் கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு 5 பெண்களிடம் 38 சவரன் நகை திருட்டு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் பாதுகாப்பு வசதிகளும் அடிப்படை வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டன. திருவிழா நடைபெறும் முக்கிய வீதிகளில் உள்ள பூத்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றதைத் தொடர்ந்து மதுரையில் திருவிழா களைகட்டியது. மீனாட்சியம்மன் கோயில் பகுதியைச் சுற்றிய வணிக ஸ்தலங்களில் வியாபாரம் அதிக அளவு இருந்தது.  சித்திரைத் திருவிழா நேற்றோடு (23-ம் தேதி) நிறைவு பெற்றது.

இந்த நிலையில், சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்டு கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் இந்திரா, ஜானகி, சாந்தாமணி பாண்டியம்மாள், அன்னலட்சுமி ஆகிய 5 பக்தர்களிடம் சுமார் 38 சவரன் நகையை மர்மக் கும்பல் திருடிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகிறார்கள். மதுரை மாநகர காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், ``பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தினாலும் பொதுமக்களின் விழிப்புணர்வு இருந்தால்தான் முழுமையாக திருட்டைத் தடுக்க முடியும்'' என்றார்.