Published:Updated:

மீண்டும் தோன்றிய பாக்தாதி! - ஐ.எஸ் பழிவாங்கும் நடவடிக்கை தொடரும் எனக் கொக்கரிப்பு!

எம்.குமரேசன்
மீண்டும் தோன்றிய பாக்தாதி! - ஐ.எஸ் பழிவாங்கும் நடவடிக்கை தொடரும் எனக் கொக்கரிப்பு!
மீண்டும் தோன்றிய பாக்தாதி! - ஐ.எஸ் பழிவாங்கும் நடவடிக்கை தொடரும் எனக் கொக்கரிப்பு!

டந்த 2014-ம் ஆண்டு  இராக்கின் மொசூல் நகரில் பொதுமக்கள் மத்தியில் தோன்றிய ஐ.எஸ் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாக்தாதி தோன்றும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு சிரியாவில் உள்ள பாகூஸ் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அறையின் தரையில் மெத்தை விரிக்கப்பட்டுள்ளது. அருகில் 3 பேர் உள்ளனர். அவர்கள் முகம் மறைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் பேசிய பாக்தாதி பாகூஸ் நகரப் போரில் தாங்கள் தோற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், போர் இன்னும் முழுமையாக முடியவில்லை என்கிறார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தன் கொடூர மனதையும் வெளிக்காட்டினான். இஸ்லாமிய தேசம் அமைப்பதற்காக உயிரிழந்தவர்களுக்காகப் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என்றும் வீடியோவில் கொக்கரிக்கப்பட்டுள்ளது.  

வெறும் 18 நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்த வீடியோ ஐ.எஸ் இயக்கத்தின் ஃபர்கான் சேனல் வெளியிட்டுள்ளது. வீடியோ காட்சிகளை பார்க்கும்போது பாக்தாதி நல்ல உடல் நலத்துடன்  உள்ளான். விமானத் தாக்குதலில் பாக்தாதி காயமடைந்ததாக முன்னதாகச் சொல்லப்பட்டது. இராக்கில் கிட்டத்தட்ட ஐ.எஸ் இயக்கம் முறியடிக்கப்பட்டு விட்டது. சிரியாவில் பாகூஸ் நகரம்தான் ஐ.எஸ் இயக்கத்தின் பிடியில் உள்ள கடைசிப் பகுதி.  

குர்தீஷ் மக்கள் நிறைந்த சிரிய வீரர்கள் அமெரிக்கா உதவியுடன் ஐ.எஸ் இயக்கத்தை வேரறுக்க முயன்று வருகின்றனர். யூப்ரடிஸ் நதியை ஒட்டிய இந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் ஐ.எஸ் இயக்கத்தினர் பதுங்கியுள்ளனர். பிப்ரவரி 9-ம் தேதி சிரிய படைகள்  பாகூஸ் பகுதியில் ஐ.எஸ் இயக்கத்தினர் தாக்குதலைத் தொடங்கினர். ஒரு காலத்தில்  இராக், சிரியா நாடுகளின் பெரும்பகுதியை பிடித்துக்கொண்டு ஆட்சி நடத்திய ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது பாகூஸ் என்ற சிறிய இடத்துக்கு முடங்கியுள்ளனர்.