Published:Updated:

இலங்கையில் கொலை வழக்கு - பூந்தமல்லியில் மூன்று இளைஞர்களிடம் விசாரணை!

இலங்கையில் கொலை வழக்கு - பூந்தமல்லியில் மூன்று இளைஞர்களிடம் விசாரணை!
இலங்கையில் கொலை வழக்கு - பூந்தமல்லியில் மூன்று இளைஞர்களிடம் விசாரணை!

இலங்கையில் கொலை வழக்கு - பூந்தமல்லியில் மூன்று இளைஞர்களிடம் விசாரணை!

பூந்தமல்லியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்த மூன்று இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. இதில் 253 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 

இந்நிலையில் தேசியப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மண்ணடியில் உள்ள ஒரு நபரை நேற்று விசாரணை செய்தபோது, பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் தங்கி இருப்பதாக தகவல் அளித்தார். இதையடுத்து தேசியப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மற்றும் கியூ பிரிவு போலீஸார் அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்று அங்கு தங்கியிருந்த 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது அதற்கு இவர்கள் மூளையாகச் செயல்பட்டார்களா எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்றது.

இதன் இறுதியில் மண்ணடியில் தங்கியிருந்த இளைஞர்களுக்கும் இலங்கை குண்டு வெடிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் இலங்கையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சென்னையில் ஓராண்டாக தங்கியிருக்கும் துனுகா ரோஷன் என்பது தெரியவந்துள்ளது. அவர்மீது இலங்கையில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இங்கு அவர் சுதர்சன் என்ற பெயரில் தங்கியிருந்தார் என்றும் கூறுகின்றனர். அதேநேரம் அவர் மீது போதிய ஆவணம் இல்லாமல் கைது செய்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு