Published:Updated:

மாணவிக்கு பாலியல் தொல்லை! - நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் மீது போக்ஸோவில் வழக்கு

மாணவிக்கு பாலியல் தொல்லை! - நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் மீது போக்ஸோவில் வழக்கு
மாணவிக்கு பாலியல் தொல்லை! - நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் மீது போக்ஸோவில் வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை! - நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் மீது போக்ஸோவில் வழக்கு

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். அந்த மாணவிக்கு அதே கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராக உள்ள பேராசிரியர் ரஞ்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் மாவட்ட குழந்தை நல அலுவலர் குமுதா விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து அந்தக் கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவர் ரஞ்சன் மீது நாகர்கோவில் மகளிர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து  அவர் மீது போலீஸார் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில், பேராசிரியர் ரஞ்சன் தலைமறைவாகிவிட்டார். போலீஸார் ரஞ்சனைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரித் தரப்பில் விசாரித்தபோது, ``சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அதனால், அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொள்வார். மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்தினோம். மாணவி தரப்பில் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் ஆட்சிமன்றக் குழுவிற்கு அனுப்பியுள்ளோம். ஆட்சிமன்றக் குழு கூடி கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத் துறையில் அவர்களுக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் காரணமாக இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டுள்ளது" என்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை! - நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் மீது போக்ஸோவில் வழக்கு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவிடம் பேசினோம், ``புகார் அளித்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிக்கு மட்டும் அல்ல; வேறு பல மாணவிகளுக்கும் அந்தப் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் வந்துள்ளது. மற்ற மாணவிகள் விடுப்பில் இருப்பதால் புகார் அளித்த மாணவியிடம் மட்டும் விசாரணை நடத்தியுள்ளோம். இந்த மாணவி கல்லூரியில் சேர்ந்தது முதலே அந்தப் பேராசிரியர் தொல்லையை ஆரம்பித்துள்ளார். ஒருமுறை மாணவி கல்லூரிக்கு மொபைல் போன் கொண்டு வந்துள்ளார். மொபைலை வாங்கிவைத்த பேராசிரியர், பின்னர் மொபைலை திரும்பக் கொடுப்பதற்காக மாணவியை தனது அறைக்கு வரவைத்துள்ளார். அப்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மாணவி கூறியுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். மாணவியின் புகார் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளேன்" என்றார்.

நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.