Published:Updated:

சாப்பாட்டில் மயக்க மருந்து, சங்கேத பாஷை மெசேஜ், 2 கோடி மதிப்பு... கோவையில் நடந்த நூதன நகைத் திருட்டு!

எம்.குமரேசன்
சாப்பாட்டில் மயக்க மருந்து, சங்கேத பாஷை மெசேஜ், 2  கோடி மதிப்பு... கோவையில் நடந்த நூதன நகைத் திருட்டு!
சாப்பாட்டில் மயக்க மருந்து, சங்கேத பாஷை மெசேஜ், 2 கோடி மதிப்பு... கோவையில் நடந்த நூதன நகைத் திருட்டு!

கோவையில் முத்தூட் நிறுவனத்தில் நகைக் கொள்ளைச் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரே கொள்ளையடிக்க காரணமாக இருந்துள்ளார். கொள்ளையடித்த நகையை விடிய விடிய உருக்கியும் உள்ளனர்

சாப்பாட்டில் மயக்க மருந்து, சங்கேத பாஷை மெசேஜ், 2  கோடி மதிப்பு... கோவையில் நடந்த நூதன நகைத் திருட்டு!

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் இயங்கி வந்த முத்தூட் நிறுவனத்தில் ரேணுகாதேவி என்ற பெண் ஊழியரின் காதலன் சுரேஷ்-  இவர் நகைப் பட்டறை தொழிலாளியின் மகன். சுரேசுக்கு நகைகளை உருக்கவும் தெரியும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, ரூ.20 லட்சம் வரை, நஷ்டத்தைச் சந்தித்த சுரேஷ், அதை ரேணுகா தேவியிடம் கூறியுள்ளார். மேலும், முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடிக்கும் திட்டத்தையும் அவரிடத்தில் தெரிவித்துள்ளார்.

முதலில்,  ரேணுகா தேவி அதற்கு மறுப்பு தெரிவித்ததும் அவரை சுரேஷ்  திட்டியுள்ளார். 'இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை கணவருக்கு அனுப்பி வைப்பேன்' என்று மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன ரேணுகாதேவி திட்டத்துக்கு ஒத்துழைத்துள்ளார். ரேணுகா தேவியை முத்தூட்  நிறுவனத்துக்குச் சென்று அடிக்கடி சுரேஷ் பார்த்துள்ளார். இதனால், அங்கு பணிபுரிந்து வந்த பெண்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். எனவே, சுரேஷை தெரிந்த பெண்கள் இல்லாத தினத்தில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர். கொள்ளையடித்த தினத்தில் அந்தப் பெண்கள் விடுப்பு எடுத்துள்ளனர். மாற்றாக திவ்யா என்ற பெண் வந்துள்ளார். 

உடனடியாக ரேணுகா தேவி இது குறித்து சுரேஷுக்கு தகவல் அளித்தார். முன்னதாக, ரேணுகா தேவி திவ்யாவுக்கு மதிய சாப்பாட்டில் மயக்க மருந்தைக் கலந்தார். திவ்யா மயக்கம் அடையவில்லை. மீண்டும், காபி வாங்கி, அதிலும் மயக்க மருந்தைக் கலக்க திவ்யா மயங்கியுள்ளார். தொடர்ந்து, ரேணுகா தேவி, `பூனை பால் குடிச்சுட்டு தூங்கிடுச்சு' என்று சங்கேத வார்த்தையில் சுரேஷுக்குத்  தகவல் அனுப்பினார். சுரேஷ், முகத்தை மறைத்துக்கொண்டு உள்ளே நுழையவும் அரை மயக்கத்தில் இருந்த திவ்யா  எழுந்தார். இதைப் பார்த்த சுரேஷ் அவரின் முகத்தில் ஓங்கிக் குத்தினார். இதில், திவ்யா மயக்கமடைய, கொண்டு வந்த பை நிறைய நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டுவிட்டு சுரேஷ், நிறுவனத்தை விட்டு வெளியேறினார். கிட்டத்தட்ட 800 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ஆகும்.

சாப்பாட்டில் மயக்க மருந்து, சங்கேத பாஷை மெசேஜ், 2  கோடி மதிப்பு... கோவையில் நடந்த நூதன நகைத் திருட்டு!

சுரேஷுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சந்தியமங்கலம். அங்கே சென்ற சுரேஷ் பெற்றோருக்குத் தெரியாமல் நகைகளை ஒளித்து வைத்தார். இரவில் பெற்றோர் உறங்கிய பிறகு காலை 4 மணி வரை நகைகளை உருக்கியுள்ளார். நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ரேணுகாதேவி, திவ்யாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். திவ்யா தான் மயங்கிய விஷயத்தைக் கூற, போலீஸாருக்கு ரேணுகா தேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. நகைகளை உருக்கிய பிறகு, சத்தியமங்கலத்தில் இருந்து ரேணுகாதேவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று அவரை சுரேஷ் பார்த்துள்ளார். அப்போது, ரேணுகாவுக்கு ரூ.50 லட்சம் தருவதாகவும் தனக்கு ஒரு கோடி எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். 

இதற்கிடையே, ரேணுகாதேவியின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தபோது, ஒரே எண்ணுக்குப் பலமுறை பேசியிருப்பதும் அந்த எண்ணுக்கு `பூனைக்குட்டி பால் குடித்தது, உறங்கி விட்டது' என்ற தகவல் அனுப்பியிருப்பதையும் போலீஸார் பார்த்தனர். பூனைக்குட்டி என்பது திவ்யாவைக் குறிக்கும் சொல்லாக இருக்கும் என்பதையும் உணர்ந்தனர். இந்தக் கோணத்தில் போலீஸார் ரேணுகாதேவியிடம் விசாரணை நடத்த அவர் உண்மையைக் கக்கி விட்டார். 

சுரேஷை கைது செய்த போலீஸார், அவரிடத்தில் இருந்து 600 பவுன் நகைகளை மீட்டனர். மீதி, 200 பவுன் நகைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் பணக்காரர்களாக ஆசைப்பட்ட சுரேஷ், ரேணுகாதேவி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர். 

Vikatan