Published:Updated:

`ஒரு ஊசி ஆயிரம் ரூபாய்!'- மாணவர்களைக் குறிவைத்த போதைக் கும்பல் கைது

`ஒரு ஊசி ஆயிரம் ரூபாய்!'- மாணவர்களைக் குறிவைத்த போதைக் கும்பல் கைது
`ஒரு ஊசி ஆயிரம் ரூபாய்!'- மாணவர்களைக் குறிவைத்த போதைக் கும்பல் கைது

`ஒரு ஊசி ஆயிரம் ரூபாய்!'- மாணவர்களைக் குறிவைத்த போதைக் கும்பல் கைது

சிங்கம் திரைப்படப் பாணியில்  மாணவர்களைக் குறிவைத்து, போதைப் பொருள்கள் சப்ளை செய்யப்படுவது குறித்து விகடன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி மாநகரில் உள்ள கல்லூரி வாசலில் போதை மருந்து சப்ளை செய்த 3 பேர் கொண்ட கும்பலைத் திருச்சி போலீஸார் லாவகமாகப் பிடித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

`ஒரு ஊசி ஆயிரம் ரூபாய்!'- மாணவர்களைக் குறிவைத்த போதைக் கும்பல் கைது

திருச்சியில் போதை மருந்துகள் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகத் திருச்சி ஶ்ரீரங்கம், ஜங்ஷன் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மாநகர் முழுவதும் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. மேலும் திருச்சி திருவெறும்பூர், சத்திரம், எடமலைப்பட்டிப் புதூர், ஶ்ரீரங்கம், முசிறி, கம்பரசம்பேட்டை பகுதிகளில் ஒத்தக்கடை கான்வென்ட் ரோடு, சத்திரம், வண்ணாரப்பேட்டை, செந்தண்ணீர்புரம், குட்ஷெட் மேம்பாலம் பகுதிகளில் பாயின்ட் வைத்து ஊருக்குள் `தம்' `இலை' என சப்ளை நடக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களுக்கு மாத்திரை சப்ளை செய்யப்படுவது குறித்தும், போதைக் கும்பலால் சீரழியும் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற இனியும் திருச்சி போலீஸார் வேடிக்கை பார்க்காமல், நடவடிக்கை எடுத்தால் சீரழிவை தடுக்கலாம்’ என்று விகடன் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் போதைப் பொருள் விற்பனைக் குறித்து கண்காணிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் போதை மருந்து சப்ளை செய்யும் கும்பல் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே ஒரு காரில் மர்ம நபர்கள் 3 பேர் நின்று, கல்லூரி மாணவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த திருச்சி கன்டோன்மென்ட் எஸ்.ஐ பாஸ்கர் தலைமையிலான தனிப்படைப் போலீஸார், அங்கு சென்று மர்ம நபர்களிடம் பேச ஆரம்பித்தனர். ஆனால், அந்த நபர்கள் மெல்ல நழுவி அங்கிருந்து தப்ப முயன்றனர். இதையடுத்து, போலீஸார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.  போலீஸார் விசாரணையில், காரில் இருந்த மூன்று பேரும், திருச்சி பீமநகர் புதுராஜா காலனி பகுதியைச் சேர்ந்த காஜா மொய்தீன், திருச்சி கீழ ஆண்டார் வீதி, பிடாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வினோத், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனி உதயசந்திரன் என்பது தெரிய வந்தது.  இவர்கள் மூன்று பேரும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து போதைப்பொருள் மாத்திரையை வாங்கி வந்து, அதை பவுடராக்கி ஊசி போடும் சிரிஞ்ச் மூலம் ஏற்றி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு ஊசி ஆயிரம் ரூபாயில் இருந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவர்களிடமிருந்து கார் மற்றும் போதை மாத்திரைகள் மற்றும் பணத்தை கைப்பற்றியதுடன், கல்லூரி மாணவர்களுக்குப் போதை மருந்துகள் விற்பனை செய்த மூன்று பேரையும் கைது செய்த திருச்சி தனிப்படை போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீஸார், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த கும்பல்கள் குறித்து விசாரிக்கவும், அவர்களைப் பிடிக்க திருச்சி மாநகருக்குட்பட்ட பல பகுதிகளில் ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகள் முன்பு யாரேனும் புதிய நபர்கள் நின்று கொண்டு மாணவர்களிடம் பேசி வருகிறார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். போதை மருந்து சப்ளை செய்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையைக் கெடுக்கும் கும்பலை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும் எனவும் திருச்சி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு