Published:Updated:

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால் சிக்கிய மகன்

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால்  சிக்கிய மகன்
`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால் சிக்கிய மகன்

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால் சிக்கிய மகன்

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால்  சிக்கிய மகன்

ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரியாவின் முதல் திருமணத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் வந்தன. இதனால், முதல் கணவரிடமிருந்து பிரிந்த அவர், திருத்தணியைச் சேர்ந்த துர்கனை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை, அவரின் உயிரைக் காவுவாங்கிவிட்டதாக உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். சிவப்பிரியாவின் தற்கொலை வழக்கை கொலைவழக்காக மாற்றிய போலீஸார், இரண்டாவது கணவர், அவரின் அம்மா, கணவரின் நண்பர் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர்.  

திருத்தணி கார்த்திகேயபுரம் கௌரி அம்மன் நகரைச் சேர்ந்தவர், கஜேந்திரன். இவரின் மகன் துர்கன் (28). இவர், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் புத்துார் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா (25) என்பவருக்கும் திருமணம் நடந்தது. சிவப்பிரியாவுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.  துர்கன், அவரை மறுமணம் செய்துகொண்டார். 

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால்  சிக்கிய மகன்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிவப்பிரியா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரின் உறவினர்களுக்கு துர்கன் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவப்பிரியாவின் உறவினர்கள், சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது, சிவப்பிரியாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்தன. இதனால், சிவப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரின் அம்மா சுஜாதா, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, போலீஸார் சிவபிரியாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து துர்கனிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``துர்கனிடம் விசாரித்தபோது சிவப்பிரியா தற்கொலைசெய்துகொண்டார் என்று சத்தியம் செய்தார். ஆனால், பிரேதப் பரிசோதனையில் சிவபிரியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததற்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்தது. இதனால், துர்கனிடம் ஏன் சிவபிரியாவை கொலைசெய்தாய் என்று விசாரித்தோம். அப்போது, அவரின் முகம் மாறியது. தொடர்ந்து, எங்கள் பாணியில் அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில்

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால்  சிக்கிய மகன்

`சிவபிரியாவை விரும்பித்தான் நான் மறுமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப்பிறகு அவரின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதைத் தட்டிக்கேட்டேன். அடிக்கடி அம்மா வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு செல்வார். ஆரம்பத்தில் எனக்கு சந்தேகம் வரவில்லை. ஒருநாள் சிவப்பிரியாவின் அம்மா, எனக்கு போன்செய்து, மகள் குறித்து விசாரித்தார். அப்போது நான், உங்கள் வீட்டுக்குத்தான் சிவப்பிரியா வந்துள்ளார் என்று கூறினேன். அதற்கு, அவள் இங்கு வரவில்லை என்று கூறினார். அதன்பிறகுதான் சிவப்பிரியாவின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவளை கண்காணிக்கத் தொடங்கினேன். 

வழக்கம்போல அம்மா வீட்டுக்குச் செல்வதாக என்னிடம் கூறிவிட்டு ஆந்திராவுக்கு புறப்பட்டார். நானும் அவளைப் பின்தொடர்ந்தேன். அப்போது அவள், முதல் கணவனை சந்தித்துப் பேசினாள். அதோடு, குழந்தைகளிடம் பேசியதை நான் பார்த்தேன். அங்கிருந்து வீடு திரும்பினேன். சிவப்பிரியா வந்தவுடன், ஏன் முதல் கணவனையும் குழந்தைகளையும் எனக்குத் தெரியாமல் சந்தித்தாய் என்று கேட்டேன். அதற்கு அவள், நான் யாரையும் சந்திக்கவில்லை என்று பொய் சொன்னாள். நீ, எங்கு சென்றுவிட்டு வருகிறாய் என்பதற்கு என்னிடம் ஆதாராம் உள்ளது என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால்  சிக்கிய மகன்

அதன்பிறகும் சிவபிரியா தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அடிக்கடி முதல் கணவனையும் குழந்தைகளையும் சந்தித்துவந்தாள். சம்பவத்தன்று, எனக்கும் அவளுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கரன்ட் வயரால் கழுத்தை நெரித்தேன். அதில் மூச்சுத்திணறி அவள் இறந்துவிட்டாள். ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். உடனடியாக என்னுடைய அம்மா விஜயாவுக்கும் நண்பர் லோகேஷுக்கும் தகவல் தெரிவித்தேன். அவர்கள் இருவரும் வந்தனர். சிவப்பிரியாவை கொலை செய்துவிட்டதை போலீஸிடம் கூறிவிடுவதாகக் கூறினேன். அப்போது அவர்கள், எதற்காக நீ சிறைக்குச் செல்ல வேண்டும்? சிவபிரியா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுவோம் என்று கூறினார்கள்.

உடனே சிவப்பிரியாவின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டோம். அதன்பிறகு, காவல் நிலையத்திலும் சிவப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினோம். முதலில் போலீஸார் நம்பினார்கள். ஆனால், பிரேதப் பரிசோதனையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம்' என்று துர்கன் எங்களிடம் கூறினார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினோம். அடுத்து, துர்கன் மற்றும் கொலையை மறைத்த குற்றத்துக்காக துர்கனின் அம்மா விஜயா, நண்பன் லோகேஸ் ஆகியோரைக் கைதுசெய்துள்ளோம். கொலைக்குப் பயன்படுத்திய கரன்ட் வயரைப் பறிமுதல்செய்துள்ளோம்" என்றனர். 

`நீ ஏன் சிறைக்குப் பாேக வேண்டும்?'- அம்மாவின் ஐடியாவால்  சிக்கிய மகன்

திருத்தணி காவல் நிலையத்தில், சிவபிரியா தற்கொலை வழக்கை விசாரித்த போலீஸார், துர்கன் தரப்பினரிடம் பேரம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, குறிப்பிட்ட தொகை கொடுத்தால் கொலையை தற்கொலையாக மாற்றிவிடலாம் என்று பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சிவப்பிரியாவின் தரப்பினர் உறுதியாக இருந்தனர். இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். இதனால் துர்கன், அவரின் அம்மா விஜயா, நண்பன் லோகேஷ் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

சிவப்பிரியாவின் இரண்டு குழந்தைகளும் கதறி அழுத சம்பவம் அங்குள்ளவர்களை கண்கலங்க வைத்தது. சிவப்பிரியா, குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள். அவர்களைச் சந்திக்க துர்கன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இரண்டாவது திருமண வாழ்க்கையும் சிவப்பிரியாவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அது, அவரின் உயிரோடு முடியும் என்று நாங்கள் கனவில்கூட நினைக்கவில்லை என்று கதறி அழுதார் சிவப்பிரியாவின் அம்மா சுஜாதா. 
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு