Published:Updated:

`கணவருக்கு மது வாங்கிக்கொடுத்தான்; என்னை வன்கொடுமை செய்தான்!'- எஸ்.பி-யிடம் பெண் கண்ணீர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`கணவருக்கு மது வாங்கிக்கொடுத்தான்; என்னை வன்கொடுமை செய்தான்!'- எஸ்.பி-யிடம் பெண் கண்ணீர்
`கணவருக்கு மது வாங்கிக்கொடுத்தான்; என்னை வன்கொடுமை செய்தான்!'- எஸ்.பி-யிடம் பெண் கண்ணீர்

`கணவருக்கு மது வாங்கிக்கொடுத்தான்; என்னை வன்கொடுமை செய்தான்!'- எஸ்.பி-யிடம் பெண் கண்ணீர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கணவருக்கு மது வாங்கிக்கொடுத்தான்; என்னை வன்கொடுமை செய்தான்!'- எஸ்.பி-யிடம் பெண் கண்ணீர்

'ஆபாச வீடியோ எடுத்துப் பலமுறை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தார்' என ரியல் எஸ்டேட் அதிபர் மீது கல்லூரி மாணவி ஒருவர் சில நாள்களுக்கு முன்பு ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, சம்பந்தப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், இந்த நபரால் ஏராளமான கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். 

இதற்கிடையே, திருமணமான பெண் ஒருவர் இன்று ஈரோடு எஸ்.பியிடம், ‘என்னுடைய கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி,  ராதாகிருஷ்ணன் என்னை ஐந்து முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தான்’ என்று புகார் அளித்து, மேலும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கலா (பெயர் மாற்றம்) என்ற பெண், ஈரோடு எஸ்.பி-யிடம் அளித்துள்ள புகார் மனுவில், “எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். என்னுடைய கணவர் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர். அவருக்கு ஒயின்ஷாப்பில் ராதாகிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அதன்பிறகு, தினமும் என்னுடைய கணவருக்கு அவர் மது வாங்கிக் கொடுத்து, அவரை அடிமையாக்கியிருக்கிறார். என் வீட்டுக்காரர் ஒருநாள் அந்த ராதாகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்து வந்து, நண்பர் என்று அறிமுகப்படுத்தியதால், சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பினேன். அதையடுத்து, என்னுடைய மகன் பிறந்தநாள் அன்று, என் கணவருடன் மது போதையில் மறுபடியும் என் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு ராதாகிருஷ்ணன் என்ன சொன்னாரோ... என்னுடைய கணவர் அப்போதிலிருந்து என்னிடம் அடிக்கடி சண்டை போட்டுவந்தார். ஒருகட்டத்தில், என் கணவருடைய தொல்லை தாங்காமல், நான் சாணி பவுடரைக் குடித்துச் சாகும் முயற்சியில் இறங்கினேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னைக் காப்பாற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

`கணவருக்கு மது வாங்கிக்கொடுத்தான்; என்னை வன்கொடுமை செய்தான்!'- எஸ்.பி-யிடம் பெண் கண்ணீர்

 மருத்துவமனையில் வந்து என்னைப் பார்த்த ராதாகிருஷ்ணன், ‘குழந்தையைப் பாத்துக்கோ, உனக்கு நான் இருக்கேன்’ என நான் வேண்டாமென்று சொல்லியும், என் மகனுடைய கையில் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். நான் மருத்துவமனையில் இருந்து சரியாகி வீட்டுக்கு வந்தபிறகு, ஒருநாள் வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன், என்னிடம் தவறாக நடந்தார். ‘உன் குழந்தைகளை நான் பாத்துக்கிறேன். உன்னை ராணி மாதிரி வச்சுக்கிறேன்’ எனக்கூறி என்னை மிரட்டியதோடு, எல்லை மீறி நடந்துகொண்டார். இந்தக் கொடுமையை நான் வெளியே சொல்ல முடியாமல் தவித்துவந்தேன். ஆனால், இப்போது அவரைப் பற்றி செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளைப் பார்த்து, புகார் அளிக்க வந்திருக்கிறேன். என்னைப்போன்ற ஏழைப் பெண்களை, இந்த மாதிரியான கயவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்’ எனக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார்.

பொள்ளாச்சி, பெரம்பலூரை அடுத்து, ஈரோட்டில் அரங்கேறியிருக்கும் இந்தப் பாலியல் விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ராதாகிருஷ்ணன் என்னும் நபரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிப்பார்கள் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு