Published:Updated:

அலாரம், ஓட்டம், வெறுத்துப்போனார்கள்! -நள்ளிரவில் ஏ.டி.எம்மில் ஆட்டோ டிரைவர்கள் நடத்திய சடுகுடு

கோவையில், மது போதையில் ஏ.டி.எம்  கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று நபர்களை  5 மணி நேரத்தில்  கோவை துடியலூர் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையத்திலிருந்து இடையார்பாளையம் செல்லும் சாலையில்,  கரூர் வைஸ்யா  வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது.  நேற்று, நள்ளிரவு 1 மணியளவில் அந்த ஏ.டி.எம்மில் எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த வங்கிப் பணியாளர், ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை அறிந்து திடுக்கிட்டனர். இது தொடர்பாக, துடியலூர் போலீஸில் வங்கி அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதுபோல் காக்கி உடையில்  முன்று பேர்  வந்துள்ளனர்.

அதில் இரண்டுபேர், ஏ.டி.எம்மிற்கு வெளியே காவலுக்கு நின்றுகொள்ள, ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து தன் கையில் வைத்திருந்த பைப் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. பணம் இருக்கும் பெட்டகத்தை உடைத்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்திருக்கிறது. இதனால் பயந்துபோன அவர்கள், பைப்பை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து, பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முயற்சிசெய்துள்ளனர். ஆனால்,  நீண்ட நேரம் போராடியும் அவர்களால் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் வெறுத்துப்போய், கொள்ளை முயற்சியைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளனர்" இந்தக் காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான பாலாஜி,  புவனேஷ்வரன், ரங்கராஜ் ஆகிய மூவர்தான் அந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில், மது போதையில் ஏ.டி.எம்  கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த  5 மணி நேரத்தில்  துடியலூர் போலீஸார் குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு