Published:Updated:

`பிஸ்கட் பாக்கெட்டுகள் மத்தியில் குட்கா’ - தேனியில் தனியார் நிறுவனத்தின் குடோனுக்கு சீல்

தேனி நகரின் மிக முக்கியப் பகுதியில் குட்கா பதுக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

`பிஸ்கட் பாக்கெட்டுகள் மத்தியில் குட்கா’ - தேனியில் தனியார் நிறுவனத்தின் குடோனுக்கு சீல்

தேனி நகரின் முக்கிய வணிகப்பகுதியான எடமால் தெருவில் உள்ளது இளங்கோவன் டிரேடர்ஸ் என்கிற தனியார் நிறுவனம். அதன் குடோன் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலாப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் டாக்டர். கருணாகரன் தலைமையிலான அதிகாரிகள், குடோனில் இருந்த அட்டைப் பெட்டிகளைச் சோதனை செய்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு மத்தியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

`பிஸ்கட் பாக்கெட்டுகள் மத்தியில் குட்கா’ - தேனியில் தனியார் நிறுவனத்தின் குடோனுக்கு சீல்

அதைத்தொடர்ந்து அந்த குடோனை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். ``குடோனில் அதிக அளவிலான அட்டைப் பெட்டிகள் உள்ளன. அனைத்திலும் சோதனை நடத்தப்படும். இரவு நேரம் என்பதாலும், சோதனை நடத்தும் சூழல் தற்போது இல்லை என்பதாலும், குடோனை பூட்டி சீல் வைத்திருக்கிறோம். காலையில் குடோனை முழுவதுமாக சோதனை செய்த பிறகுதான் குட்கா, பான் மசாலா எவ்வளவு இருக்கிறது. அதன் மதிப்பு எவ்வளவு என்பது தெரியும். குடோன் உரிமையாளரிடம் விசாரணை நடந்துவருகிறது” என்றனர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு மத்தியில் குட்கா வைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு