Published:Updated:

`நாங்க என்ன தப்பு பண்ணினோம்; வண்டியை முந்திப்போனது குத்தமா!-பாதிக்கப்பட்ட சகோதரர்கள் வேதனை

முன்னாள் போன வண்டியை முந்திச் சென்றிருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள். `மாற்று சாதியினரான எங்களை எப்படி முந்தலாம்' என இளைஞர்களைத் தாக்கியுள்ளது ஒரு கும்பல். வாழ்க்கையில் முன்னேற இடைஞ்சல் செய்த சாதி வெறி, தற்போது சாலைப் பயணத்தில்கூட முன்னேற விடாமல் முகத்தில் அடிக்கிறது.

`நாங்க என்ன தப்பு பண்ணினோம்; வண்டியை முந்திப்போனது குத்தமா!-பாதிக்கப்பட்ட சகோதரர்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் குரும்பபட்டியைச் சேர்ந்த சுதாகரன், சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சகோதரர்கள். சிறுமலை சாலையில் உள்ள ஒரு வெள்ளரி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். கடந்த 2-ம் தேதி மாலை வேலை முடித்துக்கொண்டு இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியிருக்கிறார்கள். திண்டுக்கல்-நத்தம் சாலையில் வரும்போது, ரெட்டியபட்டி அருகே உள்ள வேகத்தடை அருகே மற்றொரு வாகனத்தை இருவரும் இரு சக்கர வாகனத்தில் முந்திச் சென்றனர். அப்போது சகோதரர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

`நாங்க என்ன தப்பு பண்ணினோம்; வண்டியை முந்திப்போனது குத்தமா!-பாதிக்கப்பட்ட சகோதரர்கள் வேதனை

மருத்துவமனையில் இருக்கும் சுதாகரனை சந்தித்தோம். ``நாங்க வேலை விட்டு வண்டியில வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தோம். ஸ்பீடு பிரேக்  கிட்ட ஒரு வண்டி போயிட்டு இருந்துச்சு. அதை முந்திகிட்டுப் போனோம். அப்ப, அந்த வண்டியில இருந்தவங்க வேகமா வந்து எங்களை நிப்பாட்டுனாங்க. அவங்க நொச்சிஓடைப்பட்டி என்கிற ஊரைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தினர். `நீ குரும்பபட்டி தான, உனக்கு இவ்வளவு திமிரா? எங்களை முந்திட்டுப் போறே'னு சாதிப் பெயரோடு மோசமான கெட்ட வார்த்தையில திட்டுனாங்க. அப்ப அவங்க போதையில இருந்தாங்க. அதுனால, நாங்க அங்கயிருந்து கிளம்பிட்டோம்.

`நாங்க என்ன தப்பு பண்ணினோம்; வண்டியை முந்திப்போனது குத்தமா!-பாதிக்கப்பட்ட சகோதரர்கள் வேதனை

எங்க வீட்டுக்கு இருபது ஆளுங்க ஆயுதத்தோட வந்தாங்க. எங்களை வெளிய வரச்சொல்லி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க வண்டியை அடிச்சு நொறுக்குனாங்க. எனக்கு தலையில அடி. என் தம்பிக்கு நெஞ்சுல பயங்கர காயம். உங்களை சும்மா விடமாட்டோம்னு திரும்பத் திரும்ப சாதிப் பேரைச் சொல்லி திட்டிட்டுப் போயிட்டாங்க. என்னுடைய செல்போன் மற்றும் 4500 ரூபாயையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க. கட்டாரி மகனும் குட்டியின் மகனான சங்கரும்தான் மற்ற பசங்களை கூட்டி வந்து கும்பலாக அடிச்சாங்க.  குரும்பபட்டி ஆம்பளைகள சேல கட்டிவரச் சொல்லுடா. போய்ட்டு அவுங்க தலைய வெட்டி போட்டுட்டு வரவேண்டியதை விட்டுட்டு சும்மா வந்துட்டீங்கன்னும், என் மேல வழக்கு போட்டால் ஜாமீனில் வெளியே வந்து அவிங்களை கொல்லாம விடமாட்டேன் என்றும் கட்டாரி  சொல்லியிருக்கிறார். சாணார்பட்டியில் காவல் நிலையத்தில் கட்டாரி பெயரில் பல வழக்கு வேற இருக்கு. 

நாங்க என்ன தப்பு பண்ணினோம். ரோட்டுல போற வண்டியை முந்திகிட்டுப் போனது அத்தனை பெரிய குத்தமா, ரோட்டுல வண்டியை ஓட்டக்கூட எங்களுக்கு உரிமையில்லையா?'' என்றார் வேதனையுடன்.

சுதாகரனின் தந்தை தங்கராஜ் சாணார்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், நொச்சியோடைப்பட்டியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ், சுரேஷ் மற்றும் 15 நபர்கள் மீது பிசிஆர் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு