Published:Updated:

`170 பேர் பலி; பாக். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை!' - பால்கோட் தாக்குதல் குறித்து இத்தாலி பத்திரிகையாளர்

 புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. இந்திய விமானங்கள், 'ஆளில்லாத பகுதிகளில் குண்டு வீசிச் சென்றன. இதனால், சில மரங்கள் மட்டுமே வேரோடு சாய்ந்தன. மற்றபடி எந்தச் சேதமும் இல்லை. இந்தியா குறிப்பிடுவதுபோன்று, குறிப்பிட்ட அந்த இடத்தில் ஜெயிஷ் - இ - முகமது அமைப்பின் எந்த முகாமும் இல்லை' என்று மறுத்தது. எங்களின் மரங்களை இந்தியா சேதப்படுத்தியதாக ஐ.நா-விலும் புகார் அளித்தது பாகிஸ்தான். இருப்பினும் பா.ஜ.க தலைவர்கள், பிரதமர் மோடி ஆகியோர் தொடர்ந்து தங்களது தேர்தல் பிரசாரங்களில் இந்த முழக்கத்தை முன்வைத்துவருகின்றனர். இந்நிலையில், பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்தியது உண்மைதான் என இத்தாலி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

`170 பேர் பலி; பாக். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை!' - பால்கோட் தாக்குதல் குறித்து இத்தாலி பத்திரிகையாளர்

43 நாள்களுக்கு சர்வதேச மீடியாக்களை அனுமதித்தது பாகிஸ்தான். அப்போது, பாகிஸ்தானின் உள்ளூரில் கிடைத்த தகவல்படி இத்தாலி செய்தியாளர் பிரான்சிஸ்கா மாரினோ என்பவர் StringerAsia என்ற இணையதளத்துக்காக எழுதியுள்ள கட்டுரையில், பால்கோட் தாக்குதல்குறித்து விவரித்துள்ளார். அதில், ``பிப்ரவரி 26 -ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஜெயிஷ் - இ - முகமது அமைப்பின்மீது இந்திய விமானப்படை குண்டு வீசியுள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த இடத்துக்கு 20 கி.மீ தள்ளி இருந்த ஷிங்கியாரி கேம்ப்பில் இருந்து பாகிஸ்தான் ஆர்மி காலை 6 மணிக்கே சம்பவ இடத்துக்கு வந்தது. அங்கு காயமடைந்தவர்களை உடனடியாக ஷிங்கியாரியில் உள்ள ஹர்கத்-உல்-முஜாஹிதீன் கேம்ப்புக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, பாகிஸ்தான் ராணுவ மருத்துவர்களே தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 

`170 பேர் பலி; பாக். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை!' - பால்கோட் தாக்குதல் குறித்து இத்தாலி பத்திரிகையாளர்

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 130 முதல் 170 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம். அதேநேரம், மருத்துவமனையில் 20 பேர் வரை பலியாகியிருக்கலாம். மேலும் 45 பேர் வரை படுகாயம் அடைந்திருந்தனர். அவர்களுக்கு இன்னும் ஷிங்கியாரி கேம்ப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிகிச்சையில் குணமானவர்களை கேம்ப்பில் இருந்து வெளியே செல்ல ராணுவம் அனுமதிக்கவில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் ஏர் ஸ்ட்ரைக்கில் வெடிகுண்டு தயாரிப்புப் பயிற்சி, துப்பாக்கிப் பயிற்சி என ஜெயிஷ் - இ - முகமது அமைப்பின் 11 பயிற்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள்.

`170 பேர் பலி; பாக். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை!' - பால்கோட் தாக்குதல் குறித்து இத்தாலி பத்திரிகையாளர்

ராணுவத்துக்கு இத்தனை விவரங்கள் தெரிந்த பின்பும், இதனை மீடியாக்களில் கசியவிடாமல் பார்த்துக்கொண்டனர். தாக்குதல் சம்பவம் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, உயிரிழந்த தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் சென்றுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் இப்போது ஜெயிஷ் - இ - முகமது அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேநேரம் இந்த பயங்கரவாத அமைப்பின் அனைத்து குழுக்களில் இருந்தும் மசூத் அசாரின் பெயர் அகற்றப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்ட சில நாள்களில் இத்தாலி செய்தியாளர் ஒருவர் இப்படிக் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan