நள்ளிரவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்ப்பெண் - சைரன் எழுப்பி காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! | Ambulance driver saves tamil woman by sounds siren

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (09/05/2019)

கடைசி தொடர்பு:17:26 (09/05/2019)

நள்ளிரவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்ப்பெண் - சைரன் எழுப்பி காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

நள்ளிரவில் மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்ப் பெண்ணைக் கேரள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

photo and news credit: @mathrubhumi

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணி அளவில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு தமிழக ஜோடி ஒன்று எம்ஜி ரோடு வழியாக நடந்து வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் தமிழ்ப் பெண்ணின் கணவரை முதலில் தாக்கியுள்ளார். அவரைத் தாக்கி கீழே தள்ளியவுடன் அந்த தமிழ்ப் பெண்ணையும் தாக்கத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஜானிக்குட்டி என்பவரும், அவரது உதவியாளர் ஷித்தின் இருவரும் பெண் தாக்கப்படுவதைக் கண்டுள்ளனர். உடனே ஆம்புலன்ஸை நிறுத்தித் தாக்குதலை தடுத்தி நிறுத்த முயன்றுள்ளார் ஷித்தின். ஆனால் அவரையும் பளிங்குக் கற்களைக் கொண்டு மர்ம நபர் தாக்கத் தொடங்கியுள்ளார். 

இதில் விலா எலும்புப் பகுதியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து போராடி அந்தப் பெண்ணை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் டிரைவர் ஜானிக்குட்டி தொடர்ந்து வண்டியின் ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தை எழுப்ப அதைக் கேட்டு அங்கிருந்த சிலர் வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்துகொண்டு கீழே கிடந்த குச்சிகளைக் கொண்டு தாக்கிய டிரைவர் ஜானிக்குட்டி பெண்ணைத் தாக்குவதை நிறுத்தியுள்ளார். 

மர்ம நபர்

அதேவேளையில் நைட் ரவுண்ட்ஸில் இருந்த போலீஸும் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டு அங்கு வர மர்ம நபர் தப்பிக்கப் பார்த்துள்ளார். அவரைப் பிடித்த மக்கள் போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடத்தில் எதற்காகத் தாக்குதல் நடத்தினார்; சைக்கோவா என்கிற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் இளம்பெண்ணை நள்ளிரவு நேரத்தில் துணிச்சலாக  காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க