Published:Updated:

பொள்ளாச்சியில் மேலும் ஓர் அதிர்ச்சி... இளைஞர்களைச் சீரழிக்கும் `சைக்கெடெலிக்' பார்ட்டி!

பொள்ளாச்சியில் மேலும் ஓர் அதிர்ச்சி... இளைஞர்களைச் சீரழிக்கும் `சைக்கெடெலிக்' பார்ட்டி!
பொள்ளாச்சியில் மேலும் ஓர் அதிர்ச்சி... இளைஞர்களைச் சீரழிக்கும் `சைக்கெடெலிக்' பார்ட்டி!

பொள்ளாச்சியில் மேலும் ஓர் அதிர்ச்சி... இளைஞர்களைச் சீரழிக்கும் `சைக்கெடெலிக்' பார்ட்டி!

``விரும்பிய படிப்பைப் படிக்க முடியவில்லை. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. பார்க்கிற வேலைக்கு ஏற்ற ஊதியம் கிட்டவில்லை..." இதுபோன்று அடிப்படையான பிரச்னைகளில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் உறவுச்சிக்கல், காதல் தோல்வி, சோஷியல் மீடியா அடிக்‌ஷன் போன்ற காரணிகளால் தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒருபுறம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்களில் பலர் தங்கள் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கும்வழியாகப் போதையைத் தேர்ந்தெடுத்து, தங்கள் எதிர்காலத்தில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறார்கள். போதையை நாடினால் என்ன நடக்கும் என்பதை யாரும் யாருக்கும் விளக்கத் தேவையில்லை. ஒவ்வோர் ஊரிலும், ஏன் ஒவ்வொரு தெருவிலும் அதற்கான மோசமான முன்னுதாரணங்கள் நம் கண்முன்னே விரவிக்கிடக்கின்றன. ஆனாலும், யாரும் போதையை விடுவதாக இல்லை. மாறாக புதிய, புதிய போதைகளைத் தேடிச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடையில் நடந்த `சைக்கெடெலிக் ரேவ்’ என்கிற பார்ட்டி இன்றைய இளைஞர்களுடைய போதை தேடல் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதை நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

பொள்ளாச்சியில் மேலும் ஓர் அதிர்ச்சி... இளைஞர்களைச் சீரழிக்கும் `சைக்கெடெலிக்' பார்ட்டி!

`அதென்ன சைக்கெடெலிக் ரேவ்?' 

நகரத்திற்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அனைவரும் பாலின பேதமில்லாமல் ஒன்றுகூடி, குடித்துக் கொண்டாடுவதற்குப் பெயர்தான் ரேவ் பார்ட்டி. இந்த பார்ட்டி நடத்தப்படும் இடத்தில் வண்ணமயமான லேசர் லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். வண்ண வண்ண ஓவியங்கள் மாட்டப்பட்டிருக்கும். டி.ஜே என்று சொல்லப்படக்கூடிய உத்வேகம் தரக்கூடிய இசை லைவ்-ஆக இசைக்கப்படும். இப்படியான கிறங்கடிக்கும் சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்த போதை பொருள்கள் மூலம் போதை ஏற்றிக்கொண்டு லேசான நடனத்தோடு தன்னிலை மறந்து தனி உலகத்திற்குச் செல்வதுதான் இந்த வகை ரேவ் பார்ட்டிகளின் நோக்கம். இது மேற்கத்திய கலாசாரம். இந்தியாவில் இதற்கு அனுமதி கிடையாது. இப்படியான `ரேவ் பார்ட்டிகளில்’ கலந்துகொண்டதால் திரைப் பிரபலங்கள் கைதான வரலாறெல்லாம் இருக்கிறது. இருந்தும் வெளியில் தெரியாமல், இளைஞர்களின் எதிர்காலத்தைக் காவுவாங்கும் இந்த வகையான பார்ட்டிகள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெறுவதாக நம்பப்பட்டு வந்த இத்தகைய `பார்ட்டிகள்’ அமைதியான இயற்கையான சூழலுக்குப் பேர்போன பொள்ளாச்சியில் நடந்திருப்பதுதான் அதிர்ச்சிதரக்கூடிய விஷயம். ஏற்கெனவே, பாலியல் வழக்கால் தங்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் பொள்ளாச்சி மக்களை இந்த `பார்ட்டி’ பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை அண்ணா நகரில் ஒரு தென்னந்தோப்பில் நடந்த இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட 163 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.

பொள்ளாச்சியில் மேலும் ஓர் அதிர்ச்சி... இளைஞர்களைச் சீரழிக்கும் `சைக்கெடெலிக்' பார்ட்டி!

கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிற இந்த `பார்ட்டி’ குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம், ``விலை உயர்ந்த, சில வருடங்களிலேயே நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்து, மனித உடலை முடக்கிப்போடுகிற போதைப் பொருள்களை ரேவ் பார்ட்டியில் பயன்படுத்தி இன்பம் காண்பார்கள். அதிலும் பொள்ளாச்சியில் நடந்திருப்பது, `சைக்கெடெலிக் ரேவ்’ என்றழைக்கப்படும் பார்ட்டி. அப்படியென்றால் போதைநிலையை உச்சத்துக்குக் கொண்டுசெல்லக்கூடிய இசை வடிவம். போதையோடு இந்த இசையைக் கேட்கும்போது கேட்பவர்கள் `பரவச நிலையை’ அடைந்ததுபோல உணர்வார்கள். அவர்கள் நினைவில் நிகழ் உலகம் எதுவும் இருக்காது. விவரிக்க முடியாத விதவிதமான கற்பனைகளும், எண்ணங்களும் அவர்களை ஆட்கொள்ளும். போதை உச்சத்தில் இருக்கும்போது, உடல் சீண்டல்களெல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும். அது ஆண், பெண் தங்களுக்குள் வகுத்துவைத்திருக்கும் அத்தனை எல்லைகளையும் எளிதாக உடைத்துவிடும்.

பொள்ளாச்சியில் நடந்த ரேவ் பார்ட்டியில் இந்த இசையை இசைப்பதற்காக, இத்தாலி நிறுவனமான `பார்வதி ரெக்கார்ட்ஸ்’ என்கிற நிறுவனத்தில் பணிபுரியும் கரன் தல்வார் என்கிற மியூஷிசியனை புக் செய்து அழைத்து வந்துள்ளார்கள். அந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற பார்ட்டிகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்துகொண்டிருக்கிறது. பாலாக்காட்டைச் சேர்ந்த விஷ்ணு விஜயன் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆகாஷ் ஆகிய இருவரும் இந்த பார்ட்டியை ஒருங்கிணைத்துள்ளார்கள். இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்ட 140-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ரஷ்யாவிலிருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்கு வந்துள்ள இல்லியன் ஜோரின் என்பவரும் இதில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சாவில் ஆரம்பித்து பல போதைப் பொருள்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதைப் படித்ததும் இந்தப் போதைநிலை குறித்த ஆராய்ச்சிக்கெல்லாம் யாரும் செல்ல வேண்டாம். ஏனென்றால், போதையைவிட அது ஏற்படுத்தும் பக்க விளைவுகள்தான் கவனிக்க வேண்டியவை" என்றனர்.

பொள்ளாச்சியில் மேலும் ஓர் அதிர்ச்சி... இளைஞர்களைச் சீரழிக்கும் `சைக்கெடெலிக்' பார்ட்டி!

நன்றி: OAF Nation

சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்து பேசிய அவர்கள், ``சின்னதோ பெரிசோ போதை எந்தவிதத்தில் நன்மை தரக்கூடிய விஷயமாக இருந்திருக்கு. நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு போதையூட்டும் இந்த விவகாரம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் கற்பனைக்குள் அடக்க முடியாதவை. இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்குக் சில மாதங்களிலேயே நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு, விவரிக்கமுடியாத, மோசமான உடல் உபத்திரவங்கள் ஏற்பட்டு விடும். அவர்கள் அதுபோன்ற பாதிப்புகளைத் தொடர்ந்து, வாழக்கூடிய மிக சிலகாலமும் உயிர் மட்டுமே இருக்கும். உடலின்நிலை சீராக்க முடியாத அளவுக்கு உருக்குலைத்துவிடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மாயையாக உருவாக்கப்படும் அற்பமான சந்தோஷத்திற்கு ஆசைப்பட்டால் அற்புதமான வாழ்வை இழக்க நேரிடும்” என்று எச்சரிக்கிறார்கள்.

கடந்த வருடம் கோவையில் உள்ள மருத்துவமனைகளில், `ஆபரேஷனின் போது பயன்படுத்தப்படும் மயக்க ஊசியைத் திருடி, அதைப் போதைப்பொருளாக கல்லூரி மாணவர்களுக்கு விற்கிறார்கள் என்றும், இதனால் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள், அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் கிளம்பிய புகார் ஒட்டுமொத்த கோவையையும் அதிரவைத்தது. உடனடியாக அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கோவை போலீஸார் கைது செய்தனர். மாணவர்கள் இதுபோன்ற தவறான வழிகளுக்குச் செல்லக்கூடாது என்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என எச்சரித்தது போலீஸ். 

ஆனாலும், என்ன பயன்? அடுத்தடுத்து போதை விவகாரங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பட்டுத் திருந்தட்டும் என்று விட்டுவிட முடியாத விவகாரம் இது. ஏனென்றால் ஒருமுறை போதைக்கு அடிமையாகி விட்டால் மனந்திருந்தலாம். உயிர் திரும்பாது..!

அடுத்த கட்டுரைக்கு