Published:Updated:

`ஆடி காரில் வந்தார்... அதிர்ச்சி கொடுத்தார்' - சிசிடிவியால் சிக்கிய பின்னணி 

`ஆடி காரில் வந்தார்... அதிர்ச்சி கொடுத்தார்' - சிசிடிவியால் சிக்கிய பின்னணி 
`ஆடி காரில் வந்தார்... அதிர்ச்சி கொடுத்தார்' - சிசிடிவியால் சிக்கிய பின்னணி 
`ஆடி காரில் வந்தார்... அதிர்ச்சி கொடுத்தார்' - சிசிடிவியால் சிக்கிய பின்னணி 

ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸார், ஆடி கார் ஒன்றை மடக்கினர். அதிலிருந்து இறங்கிய நபர் போதையில் இருந்தார். `காரை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், அபராதம் செலுத்திவிட்டு எடுத்துக்கொள்கிறேன்' என்று அந்தப் போதை ஆசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் வசித்து வருபவர் ஆகாஷ் குமார். இவர் பிராட்வேயில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரின் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சகோதரனைப் பார்க்க ஆகாஷ் குமார் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது சகோதரர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி கார் மாயமானது. 

இதையடுத்து, சென்னை திரும்பிய ஆகாஷ்குமார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது காவலாளி ஒருவர் காரை திருடிச் செல்லும் காட்சியைப் பார்த்து ஆகாஷ்குமார் அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் திருட்டுப்போன காரை கண்டுபிடித்துத் தரும்படி கூறியிருந்தார். அதோடு சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார். 

இதையடுத்து ஆடிகாரை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில் எழும்பூர் பகுதியில் போலீஸார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வேகமாக ஆடி கார் வந்தது. அதைப்பார்த்த போலீஸார் காரை மடக்கினார். அப்போது காருக்குள் இருந்து ஒருவர் இறங்கினார். அவர் போதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

காரிலிருந்து இறங்கிய நபர், `என் காரை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நாளை வந்து அதற்குரிய அபராதத்தைச் செலுத்திவிட்டு காரை எடுத்துக்கொள்கிறேன்' என்று கூறியபடி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரை போலீஸார் பிடிப்பதற்குள் அவர் மாயமாகிவிட்டார். 

இதையடுத்து காரின் பதிவு எண் குறித்து போலீஸார் விசாரித்தபோது சில நாள்களுக்கு முன் திருட்டுப்போன தகவல் தெரியவந்தது. உடனடியாக ஆகாஷ்குமாருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவரும் அந்தக் கார் தன்னுடையது என்று கூறினார். ரோந்து போலீஸார் குடிபோதையில் காரை ஓட்டி வந்தவரை எளிதாகப் பிடித்திருக்க முடியும். ஆனால், பணியிலிருந்த காவலர்களின் அலட்சியம் காரணமாக அந்த நபர் தப்பிவிட்டார். தற்போது அவரை தேடிவருகின்றனர். தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதையாக உள்ளது. 
 

Vikatan