Published:Updated:

சினிமா பாணியில் பலே ப்ளான்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சினிமா பாணியில் பலே ப்ளான்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
சினிமா பாணியில் பலே ப்ளான்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சினிமா பாணியில் பலே ப்ளான்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மதுரை கண்காட்சியிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட 11 கோடி ரூபாய் நகை, செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கொள்ளையடிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை போல வேடமிட்டு இக்கொள்ளையை நிகழ்த்திய கொள்ளையர்கள், ஏழரை லட்ச ரூபாய் பணத்தையும் சேர்த்துத் திருடிச் சென்றனர். காஞ்சிபுரம் காவல்துறை விசாரித்து வந்த இவ்வழக்கில், தற்போது முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா பாணியில் பலே ப்ளான்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சென்னை ராயப்பேட்டையில் அமேதிஸ்ட் என்கிற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நகைக்கடை சார்பில் ஏப்ரல் 26, 27 தேதிகளில் மதுரையில் பழங்கால கலைத்திறன் உடைய நகைக் கண்காட்சி நடைபெற்றது. இதில் விற்கப்படாத 11 கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்க, வைர நகைகள், 7.5 லட்ச ரூபாய் பணத்தோடு, நகைக்கடையின் மேலாளர் தயாநிதி ஏப்ரல் 28-ம் தேதி சென்னைக்குப் பயணமானார். அவரோடு ஒரு பெண் ஊழியர் உட்பட மொத்தம் நான்கு பேர் பயணமாகியுள்ளனர். இவர்களின் வாகனம் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, குறுக்கே வழிமறித்த ஏழு பேர், தங்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை என அறிமுகம் செய்து கொண்டு வாகனத்தைச் சோதனையிட்டுள்ளனர். நகைக்கடை ஊழியர்களின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சினிமா பாணியில் பலே ப்ளான்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

காரில் இருந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி அவற்றையும், ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த அந்நபர்கள், மேலாளர் தயாநிதியை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பியுள்ளனர். ஒரகடம் அருகே சென்றவுடன், ‘சரியான பேப்பர்ஸ ஆபிஸ்ல கொடுத்து நகையை மீட்டுக்கோங்க’ என்று சொல்லி தயாநிதியை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுப் பறந்துவிட்டனர். நகை போன அதிர்ச்சியில் மீளாத தயாநிதி, உடனடியாக நடந்தவற்றை தன் உரிமையாளர் கிரண்ராவ்விடம் ஒரு பி.சி.ஓ.வில் இருந்து போன் செய்து தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு போலீஸில் வழக்கும் பதியப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சினிமா பாணியில் பலே ப்ளான்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கிரண் ராவ் கொள்ளைபரனூர் சுங்கச்சாவடி சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக தப்புவது பதிவாகியிருந்தது. அவரது அடையாளங்களும் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. இதனடிப்படையில், மதுரையைச் சேர்ந்த முகமது அப்பாஸ் என்கிற அந்த இளைஞர் பத்து நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பெயரில், ராமச்சந்திரன், மணிகண்டன், ரமேஷ் ஆகியோரையும் கைது செய்த காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார், அவர்களிடமிருந்து 7.65 கோடி மதிப்பிலான நகைகளையும் மீட்டனர். தற்போது கிரண்ராவ்வின் அமேதிஸ்ட் நகைக்கடையில் வேலைப் பார்த்த வினோத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இவர் தான் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படுகிறது.

விசாரணை குறித்து நம்மிடம் பேசிய தனிப்படை காவல்துறை, “சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவரான வினோத், அமேதிஸ்ட் கடையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்குக் கடுமையான பணநெருக்கடிகள் இருந்துள்ளன. கடந்தாண்டு சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை பழங்கால சிலைகள், கலைப் பொருட்களைக் கைப்பற்றினர். அதேநேரத்தில், அமேதிஸ்ட் நகைக்கடையின் உரிமையாளரான கிரண்ராவ்வின் போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டது. இவர்கள் முன்ஜாமீனில் வெளியே இருந்தாலும், கிரிமினல் வழக்கு  நிலுவையில் தான் இருக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட வினோத், இவ்விவகாரத்தைப் பயன்படுத்தி பணமாக்கத் திட்டமிடுகிறார்.

தனது நண்பர்களான செல்வக்குமார், அருண், ரஞ்சித்குமார், மின்னல் மணி ஆகியோரிடம் போலியான இ-மெயில் முகவரியை உருவாக்கச் சொல்லி, அதிலிருந்து கிரண்ராவ்வின் மெயிலுக்கு பழைய சிலைகடத்தல் வழக்கைக் காரணம் காட்டி மிரட்டல் விடுக்கச் செய்கிறார். இதற்கெல்லாம் கிரண் ராவ் மசியவில்லை. இந்நிலையில், கண்காட்சிக்காகக் கோடிக்கணக்கான ரூபாய் நகை மதுரை செல்வது வினோத்துக்குத் தெரியவருகிறது. உடனடியாக திட்டமிட்ட வினோத் கும்பல், மதுரையில் ரூம் எடுத்துத் தங்கி, நகைக்கடை மேலாளர் தயாநிதியை பின் தொடர்ந்துள்ளனர். அவரின் வாகனம் பரனூர் சுங்கச்சாவடி வந்த போது, மடக்கிக் கொள்ளையடித்துள்ளனர். இச்சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட வினோத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மற்ற கூட்டாளிகளையும் தேடி வருகிறோம். கொள்ளைப் போன நான்கு சூட்கேஸ்களில் இரண்டு மீட்கப்பட்டுள்ளது. மீதி இரண்டு சூட்கேஸ்கள், அதிலிருக்கும் நகைகளையும் விரைவில் மீட்டுவிடுவோம்.” என்றனர்.

நகைக்கடை உரிமையாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த இக்கொள்ளைச் சம்பவத்தில், விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை காவல்துறை கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு