`உன்னால்தான் ஃபெயிலானேன், நீயே ஃபீஸ் கட்டு!'- காதலியிடம் பணம் பறிக்க முயன்ற மருத்துவ மாணவன் கைது | Medical student fail exam and asks lover to pay fees

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (11/05/2019)

`உன்னால்தான் ஃபெயிலானேன், நீயே ஃபீஸ் கட்டு!'- காதலியிடம் பணம் பறிக்க முயன்ற மருத்துவ மாணவன் கைது

மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) நகரை சொந்த ஊராகக்கொண்ட பெயர் குறிப்பிடப்படாத அந்த 21 வயது மாணவன், அவுரங்காபாத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் படித்துவருகிறார். நன்கு படிக்கும் மாணவரான அவர், தேர்வில் சரியாகக் கவனம் செலுத்தாததால், முதலாம் ஆண்டு நடந்த இறுதித் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. இதனால், அவர் இரண்டாம் ஆண்டுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மருத்துவ மாணவர்

தான் தேர்வில் கவனம் செலுத்தாததற்கு அதே வகுப்பில் படிக்கும் தன் காதலிதான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதற்கு நஷ்ட ஈடாகத் தன் தேர்வுக் கட்டணத்தை காதலிதான் கட்ட வேண்டும் என அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண், மாணவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இருந்தும் விடாத மாணவன், அந்தப் பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் போன்செய்து தொந்தரவுசெய்துள்ளார். அப்போதும் அந்தப் பெண் மாணவரிடம் பேசவில்லை. இறுதியில்,  என் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில், `நீ என்னைக் காதலித்த விஷயத்தை உன் தந்தையிடம் சொல்லிவிடுவேன்' என்றும், `நாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிவிடுவேன்' எனவும் மிரட்டியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நடந்த அனைத்தையும் தன் வீட்டில் கூறியுள்ளார். அவர்கள், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மிரட்டிப் பணம்பறித்தல், ஏமாற்றுதல், கிரிமினல் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரைக் கைதுசெய்துள்ளனர் போலீஸார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.