Published:Updated:

`ஊசி போட்டு கொன்றுவிட்டார்கள்!'- தி.மு.க வேட்பாளரின் மருத்துவமனை மீது அதிர்ச்சிப் புகார்

`ஊசி போட்டு கொன்றுவிட்டார்கள்!'- தி.மு.க வேட்பாளரின் மருத்துவமனை மீது அதிர்ச்சிப் புகார்
`ஊசி போட்டு கொன்றுவிட்டார்கள்!'- தி.மு.க வேட்பாளரின் மருத்துவமனை மீது அதிர்ச்சிப் புகார்

மதுரை நிலையூரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் தி.மு.க. வேட்பாளரின் மருத்துவமனை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

`ஊசி போட்டு கொன்றுவிட்டார்கள்!'- தி.மு.க வேட்பாளரின் மருத்துவமனை மீது அதிர்ச்சிப் புகார்

மதுரை நிலையூரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண் உடல்நலக் குறைவால் மதுரை சரவணா பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக  சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த அவருக்கு கடுமையாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சரவணா மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவருக்கு ஊசி போட்டதைத் தொடர்ந்து மீண்டும் உடல் பாதித்து சுயநினைவு இழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்களிடம் பஞ்சவர்ணத்தின் உறவினர் கேட்டபோது, `அவரை உடனடியாக அரசு மருத்துமனைக்குக் கொண்டு செல்லுங்கள். உங்களால் அதிக பணம் செலவு செய்யமுடியாது' என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பஞ்சவர்ணம் அங்கேயே இறந்ததாகவும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் தூண்டிவிடுகின்றனர். வேட்பாளர் என்பதால் அவரது பெயரைக் கெடுக்க வேண்டும்` என்று நினைப்பதாக தெரிவித்தனர்.

தி.மு.க வேட்பாளர் சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் அவரது மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan