Published:Updated:

`சாலையில் இழுத்துச் சென்றார்; கால்வாயில் மூழ்கடித்தார்!' - ஒல்லிகுமாரால் நாய்க்கு நடந்த கொடூரம்

`சாலையில் இழுத்துச் சென்றார்; கால்வாயில் மூழ்கடித்தார்!' - ஒல்லிகுமாரால் நாய்க்கு நடந்த கொடூரம்
`சாலையில் இழுத்துச் சென்றார்; கால்வாயில் மூழ்கடித்தார்!' - ஒல்லிகுமாரால் நாய்க்கு நடந்த கொடூரம்
`சாலையில் இழுத்துச் சென்றார்; கால்வாயில் மூழ்கடித்தார்!' - ஒல்லிகுமாரால் நாய்க்கு நடந்த கொடூரம்

சென்னையில் சாலையில் நாய் ஒன்றை லுங்கி அணிந்த ஒல்லிகுமார் இழுத்துச் சென்றார். பிறகு அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் அந்த நாயைத் தூக்கி வீசுகிறார். உயிருக்குப் போராடிய நாய், சிறிது நேரத்தில் இறந்துவிடுகிறது. இந்த வீடியோ காட்சி, சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

இந்த வீடியோவைப் பார்த்த சென்னை போரூர் ஆலப்பாக்கம் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் மகாதேவன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், நான், ஆல்மைட்டி அனிமல் கேர் என்ற டிரஸ்ட்டை நடத்திவருகிறேன். மூலக்கொத்தளம் பகுதியில் கொடூரமான முறையில் நாயை ஒருவர் சாலையில் இழுத்துச் செல்கிறார். பிறகு தண்ணீரில் மூழ்கடித்து அதைக் கொலை செய்கிறார். இந்தச் சம்பவத்தின் வீடியோ, போட்டோ எனக்குக் கிடைத்தது. நாயைக் கொடூரமாகக் கொலை செய்த அந்த வாலிபர் மீது ஐபிசி 492 மற்றும் மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாயை சித்ரவதை செய்து கொலை செய்தவர் யார் என்று போலீஸார் தேடிவருகின்றனர். 

`சாலையில் இழுத்துச் சென்றார்; கால்வாயில் மூழ்கடித்தார்!' - ஒல்லிகுமாரால் நாய்க்கு நடந்த கொடூரம்

இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர் சாய் விக்னேஷிடம் கேட்டதற்கு, ``சென்னை மற்றும் அதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில் நாய்களுக்கு பலவகையில் தொல்லை கொடுக்கப்பட்டுவருகிறது. மாதவரம் பால்பண்ணைப் பகுதியில் உள்ள மாத்தூரில் 4 நாய்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ எங்களுக்குக் கிடைத்தது. உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். புகார் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்தவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் மனவளர்ச்சிக் குன்றியவர் என்று தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சைதாப்பேட்டை பகுதியில் நாயிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். அதன் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அந்த நபர், ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார். அவரின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். 

`சாலையில் இழுத்துச் சென்றார்; கால்வாயில் மூழ்கடித்தார்!' - ஒல்லிகுமாரால் நாய்க்கு நடந்த கொடூரம்

கடந்த மே 11-ம் தேதி எங்கள் டிரஸ்ட்டுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், மூலக்கொத்தளம் பகுதியில் ஒல்லிகுமார் என்பவர், நாயை சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்த வீடியோ மற்றும் போட்டோக்களை அனுப்பி வைத்தார். அதன்அடிப்படையில் புகார் கொடுத்துள்ளோம். இந்தப் புகாரின் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். 

கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கூவம் ஆற்றியில் நாய்கள் இறந்துகிடந்தன. சடலத்தை மீட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோம். அப்போது, பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதுதொடர்பாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். வழக்கை விசாரித்த போலீஸார், நாய்களைக் கொன்றவர் அ.தி.மு.க பிரமுகர் என்பதை கண்டறிந்தனர். ஆனால், அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார். 

`சாலையில் இழுத்துச் சென்றார்; கால்வாயில் மூழ்கடித்தார்!' - ஒல்லிகுமாரால் நாய்க்கு நடந்த கொடூரம்

தெரு நாய்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளதே என்று சாய் விக்னேஷிடம் கேட்டதற்கு, ``சென்னையைப் பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2 லட்சத்துக்கு மேல் தெருநாய்கள் இருந்தன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. நாய்கள் இல்லாத தெருக்களில்தான் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. நாய்களுக்குக் குடும்ப கட்டுப்பாடு செய்தால் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால், மாநகராட்சி பெயரளவுக்கே நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டை செய்துவருகிறது. குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட நாய்களின் காதில் ஒரு சிறிய துளை போடப்பட்டு இருக்கும். ஆனால், குடும்ப கட்டுப்பாடு செய்யாமலே மாநகராட்சி ஊழியர்கள் நாய்களின் காதுகளில் துளை போடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், முறையாகக் குடும்ப கட்டுப்பாடு செய்யப்படாததால் நாய்களிள் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. நாய்கள் குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்" என்றார். 

போலீஸாரிடம் கேட்டதற்கு, ``விலங்குகள் சித்ரவதை, கொலை செய்யப்படுவது குறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஆயிரம் விளக்கு காவல் நிலைய வழக்கில் விஷம் வைத்து நாய்கள் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தது. ஆனால், விஷம் வைத்தது யாரென்று விசாரித்துவருகிறோம். சைதாப்பேட்டை, மாதவரம் பால்பண்ணை ஆகிய காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர். 

Vikatan