`எனக்கு உதவிய நண்பரை காப்பாற்றுங்கள்!' - சவுதியிலிருந்து மீட்கப்பட்ட பெண் கண்ணீர் | woman tied to tree as punishment for leaving furniture outside in the sun at saudi

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:16:49 (15/05/2019)

`எனக்கு உதவிய நண்பரை காப்பாற்றுங்கள்!' - சவுதியிலிருந்து மீட்கப்பட்ட பெண் கண்ணீர்

வெளிநாட்டவர்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு அளிக்கும் நாடுகளில் ஒன்றாக அரபு நாட்டில் சவுதி அரேபியா இருந்து வருகிறது. அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவே இங்கே வேலை பார்க்கின்றனர். பெண்கள் அதிகமாக வீட்டு வேலைக்குச் செல்வதும் இங்குதான். அப்படிச் சவுதியில் வீட்டு வேலைக்குச் செல்பவர்கள், பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம். பலர் அங்கு சித்ரவதை செய்வதாக வீடியோவில் கதறுவதைப் பார்த்திருப்போம். ஆனால், சில மனித நேயமிக்க செயல்கள் சமீபகாலமாக வெளிவந்தநிலையில் அந்த முகம் மாறிவந்தது. இப்போது மீண்டும் தனது கொடூர முகத்துக்குத் திரும்பும் வகையில் தற்போது சவுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அகோஸ்டா பார்லேலோ சவுதி

அகோஸ்டா பார்லேலோ என்ற 26 வயது இளம் பிலிப்பைன்ஸ் பெண் சவுதியில் வீட்டு வேலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வாரம் இவர் வேலை செய்யும் வீட்டு முதலாளி, அகோஸ்டாவை மரத்தில் கட்டி வைத்துள்ளார். கை, கால்கள் அசைக்க முடியாத வகையில் வீட்டு தோட்டத்திலேயே உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால், வீட்டில் இருந்த பர்னிச்சர் பொருள்களை நீண்ட நேரமாக வெயிலில் தூக்கி வைத்ததால் இப்படி மரத்தில் கட்டி வைத்து உணவு ஏதும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். ஆனால், அவருடன் பணிபுரிந்துவரும் நண்பர் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதைப் புகைப்படமாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

அகோஸ்டா பார்லேலோ

பின்னர். இது சவுதி வாழ் பிலிப்பைன்ஸ் மக்கள் மத்தியில் வைரலாகப் பரவ, சிறிய தவறுகளுக்கு இப்படி பெரிய தண்டனைகளைக் கொடுக்கிறார்கள் எனப் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்குப் புகார் சென்றுள்ளது. பின்னர் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை நடவடிக்கையின் காரணமாக அவர் மீட்கப்பட்டுள்ளார். ``என்னை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி. இப்போது எனக்குப் பயமே எனக்கு உதவுவதற்காகப் போட்டோ எடுத்த என் நண்பரைப் பற்றிதான். இந்தச் செயலால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அவரையும் இந்த விவகாரத்திலிருந்து காப்பாற்ற நீங்கள் மீண்டும் உதவ வேண்டும்" எனத் தண்டனையிலிருந்து மீண்ட அகோஸ்டா கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க