`கணவனிடம் எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை!'- உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி | daughter in law commits suicide over father in law's sexual torture near Thiruttani

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (16/05/2019)

கடைசி தொடர்பு:12:20 (16/05/2019)

`கணவனிடம் எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை!'- உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மருமகள்   தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துக்கொண்ட மனைவி யுவராணி

திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் முனிகிருஷ்ணன். இவருக்கும் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த யுவராணி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முனிகிருஷ்ணன் வெங்கடாபுரம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஓட்டுநரான முனிகிருஷ்ணன் இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று விடுவார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அப்பா டில்லி பாபு, தன் மகன் இல்லாத நேரத்தில் மருமகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதைக் கண்டித்த யுவராணி, தன் கணவரிடம் பல முறை சொல்லி இருக்கிறார். மனைவி யுவராணி சொன்னதை முனிகிருஷ்ணன் கேட்கவே இல்லை. தன் தந்தை மீது மனைவி வீண் பழி சுமத்துகிறார் என்று மனைவியைக் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், மாமனார் டில்லி பாபு மருமகளிடம் தனிமையில் இருக்கும்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான யுவராணி இதைக் கணவரிடம் சொன்னாலும் நம்பவில்லை. இதனால் மனவேதனை அடைந்த யுவராணி நேற்று  தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முனிகிருஷ்ணன் யுவராணியைத் தேடினார். படுக்கை அறையில் சென்று பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி டி.எஸ்.பி சேகர் உடலைக் கைப்பற்றி  திருத்தணி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேகத்தின் பெயரில் கணவர் முனிகிருஷ்ணனையும் அவரின் அப்பா  டில்லிபாபுவையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.  யுவராணி கொலைக்கு டில்லி பாபுதான் காரணம் எனத் தெரியவந்தது. பின்னர் டில்லிபாபுவைக் கைது செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் திருத்தணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.