மன்னார்குடி கொல்லிமலைக்கு நடந்த கொடுமை - குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது! | one arrested in goondas act at mannarkudi

வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (16/05/2019)

கடைசி தொடர்பு:22:25 (16/05/2019)

மன்னார்குடி கொல்லிமலைக்கு நடந்த கொடுமை - குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது!

கொல்லிமலை என்பவர் வாயில் மலம் திணிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சக்திவேல் என்பவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொல்லிமலை

திருவாரூர் மாவட்டம் திருவண்டுதுறை கிராமத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கொல்லிமலை என்கின்ற வாமலைவாசனுக்கும் பிற சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை மலம் சாப்பிடக்கோரியும் சிறுநீர் அருந்தக்கோரியும் அடித்தார்கள் கொடுமைப்படுத்தினார்கள் என்ற புகார் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்தச் சம்பவத்தை வழக்காகப் பதிவு செய்த திருவாரூர் மாவட்டக் காவல்துறையினர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரைக் கைது செய்தனர். மேலும், இதுபோன்ற சாதிய ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர்மீது குண்டர் சட்டம் பாயும் எனத் திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிகாரி துரை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்குத் திருவாரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் துரை ஏற்கெனவே தங்களுடைய தரப்பில் அறிக்கை அனுப்பியுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் அதிகாரி

மலம் திணித்தாக எழுந்த புகாரில் தொடர்புடைய சக்திவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனத் திருவாரூர் மாவட்ட எஸ்.பி துரை பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், சக்திவேல் என்பவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.