Election bannerElection banner
Published:Updated:

`திருட்டில் ஈடுபட்ட இளைஞர்; வாக்குறுதி அளித்த நண்பர்' - சவுதியில் இந்தியரின் வலது கையைத் துண்டிக்க உத்தரவு!

வுதியில் திருட்டில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வலது கையைத் துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`திருட்டில் ஈடுபட்ட இளைஞர்; வாக்குறுதி அளித்த நண்பர்' - சவுதியில் இந்தியரின் வலது கையைத் துண்டிக்க உத்தரவு!

ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதியில் உள்ள ஆபா நகரத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக இங்கு அவர் பணிபுரிந்து வந்த நிலையில், சுமார் 1.1 லட்சம் ரியால் காணாமல் போனது. இளைஞர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. திருடிய இளைஞரை சவுதிக்கு வேலைக்கு அழைத்து வந்த நண்பர், திருட்டுப் போன பணத்தைத் தந்து விடுவதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால், நண்பரால் உறுதி அளித்தபடி பணத்தை திரட்டிக் கொடுக்க முடியவில்லை. போலீஸ் விசாரணையில், திருடிய இளைஞரின் அறையில் இருந்து முழுத் தொகையும் கைப்பற்றப்பட்டது. 

வழக்கு விசாரணையில், இளைஞர்தான் பணத்தைத் திருடியது சாட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, சவுதி குற்றவியல் நீதிமன்றம் திருடிய இளைஞரின் வலது கையைத் துண்டிக்க உத்தரவிட்டுள்ளது. எனினும், மே 22-ம் தேதி வரை மேல் முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆஷீர் என்ற நகரத்தில் செயல்பட்டு வரும் இந்தியச் சமூக அமைப்பைச் சேர்ந்த சயீத் மவுலவி என்பவர் இந்திய இளைஞருக்கு சட்ட ரீதியிலான உதவிகள் செய்து வருகிறார். தற்போது, இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுதியில் சிறு குற்றங்களுக்கே உடல் பாகங்கள் துண்டிக்கப்படுவது வழக்கம். போதை மருந்து, தீவிரவாதச் செயல்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்படும். 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு