Published:Updated:

எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு:போலீஸ் காவலில் இருந்த ரவுடி திடீர் மரணம்

எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு:போலீஸ் காவலில் இருந்த ரவுடி திடீர் மரணம்
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு:போலீஸ் காவலில் இருந்த ரவுடி திடீர் மரணம்
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு:போலீஸ் காவலில் இருந்த ரவுடி திடீர் மரணம்

மதுரை: எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி கொக்கி குமார் நேற்று போலீஸ் காவலில் இருக்கும் போது மரணமடைந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், திருப்பத்தூரில் ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதி மருது சகோதரர்களின் குருபூஜை விழா நடைபெறும். அதேபோன்று கடந்த 27.10.12 அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற சிலர் மோதலில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ. ஆல்வின் சுதனை, ரவுடிகள் சிலர் கத்தியால் குத்திக் கொன்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி பிரவு ஏற்கெனவே போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான மற்றவர்கள் எல்லோருக்கும் கடந்த வாரம் தான் ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்த இவர்கள் மானாமதுரை, திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் உள்ள போலீஸ் இன்ஃபார்மர்கள் அனைவரையும் மிரட்ட ஆரம்பித்தார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன்பு புல்லத்தியான் என்ற போலீஸ் இன்ஃபார்மர் இவர்களால் தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி கொக்கி குமார் நேற்று (6ஆம் தேதி) மாலை ஆவாரங்காடு கிராமத்தில் அரிவாளுடன் தகராறு செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையில் போலீஸார் அவரைப் பிடித்து திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு:போலீஸ் காவலில் இருந்த ரவுடி திடீர் மரணம்

இரவு 7 மணி வரை காவலில் இருந்த அவர், திடீரென இறந்து விட்டதாக தகவல் பரவியது. அது என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையின் ஏரியா என்பதால், என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக வதந்தியும் பரவியது.

##~~##
இந்தச் சம்பவத்தால் சாதி ரீதியான பிரச்னை எழுவதைத் தடுக்க திருப்பாச்சேத்தி, ஆவாரங்காடு, புதுக்குளம் பகுதியில் வெளிமாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
போலீஸ் காவலில் இறந்த கொக்கி குமாரின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு குவிந்த உறவினர்கள், விசாரணை என்ற பெயரில் போலீஸார் அவரை அடித்தே கொன்று விட்டதாக கோபத்துடன் தெரிவித்தனர்.
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் 3வது குற்றவாளியான கொக்கிகுமார் மீது பூவந்தி, பழையனூர், திருப்புவனம், மானாமதுரை போன்ற போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு  கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்