மானாமதுரையில் அ.ம.மு.க ஒன்றியச் செயலாளர் ஓட ஓட வெட்டிப் படுகொலை! | AMMK cadre murdered in manamadurai

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (26/05/2019)

கடைசி தொடர்பு:07:29 (27/05/2019)

மானாமதுரையில் அ.ம.மு.க ஒன்றியச் செயலாளர் ஓட ஓட வெட்டிப் படுகொலை!

மானாமதுரையில் அ.ம.மு.க ஒன்றியச்செயலாளர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மானாமதுரை அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் சரவணன்

மானாமதுரை பாண்டியன் நகரில் வசித்து வருபவர் சரவணன். இவர், திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காட்டைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஊமத்துரை. இவர், தற்போது அ.ம.மு .க கட்சியில் மானாமதுரை மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவர் தினந்தோறும் காலை நேரத்தில் மானாமதுரை - சிவகங்கை பைபாஸ் ரோட்டில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம், இன்று காலை அதேபோன்று வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தேர்தல் விரோதமா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்து சிவகங்கை மாவட்ட அ.ம.மு.க செயலாளர் உமாதேவன், முன்னாள் எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி ஆகியோர் சென்னையிலிருந்து அவசர அவசரமாக மானாமதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த பிறகு உடலை வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க