Published:Updated:

தீர்ப்பு வேண்டாம்... வேலை வேண்டும்!

திக்குத் தெரியாத முத்துக்கிருஷ்ணன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

து 1995-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி.... நாகூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் முத்துக்கிருஷ்ணன் வீட்டுக்கு, ராமாயண புத்தகம் தபால் பார்சலில் வந்தது. அந்தச் சமயத்தில் அவர் வீட்டில் இல்லை. அதனால் பார்சலை வாங்கிய அவரது மனைவி தங்கம், பார்சலைப் பிரித்தார். உடனே, பார்சல் வெடிக்க... உடல் சிதறி குடல் சரிந்து பலியானார் தங்கம். இதுகுறித்து, 12.7.1995 தேதியிட்ட ஜூ.வி. இதழில் 'கணவருக்குக் குறி வைத்தார்கள்... பலியானார் மனைவி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். 

தீர்ப்பு வேண்டாம்... வேலை வேண்டும்!

பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வெடிகுண்டு வழக்கில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தீர்ப்பு வந்திருக்கிறது. த.மு.மு.க. மாநிலத் தலைவர் ரீபாய் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

முத்துக்கிருஷ்ணனிடம் பேசினோம்... ''என் மனைவி மரணத்துக்கு விடை சொல்லும் வகையில், நல்ல தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆனால், அதைக் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு என் குடும்பம் நிறைய சங்கடங்களை சந்தித்து

தீர்ப்பு வேண்டாம்... வேலை வேண்டும்!

விட்டது. சங்கீதா, ஷகீலா, கார்த்திகா, அங்கையற்கண்ணி என, எனக்கு நாலு பெண் குழந்தைங்க. மூத்தவளுக்கு அப்ப 14 வயசு. கடைசிப் பொண்ணுக்கு ரெண்டு வயசு.

அப்பவும் 'அம்மா’ ஆட்சிதான். சம்பவம் நடந்த மறுநாள், வருவாய்த் துறை அமைச்சரா இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் என் வீட்டுக்கே வந்தார். 10,000 ரூபா பணம் கொடுத்துட்டு, அம்மா தேவையான உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார். 'இப்போதைக்கு எதுவும் தேவை இல்லை’னு சொல்லி அனுப்பிட்டேன்.

தீர்ப்பு வேண்டாம்... வேலை வேண்டும்!

கஷ்டப்பட்டு நாலு குழந்தைகளையும் படிக்க வைச்சுட்டாலும், என்னால் இப்போ பொருளாதார நிலையைச் சமாளிக்க முடியலை. என் நிலையை முதல்வர் அம்மாவுக்குக் கடிதம் மூலமாத் தெரிவிச்சேன். அது அவங்களுக்குப் போய் சேர்ந்துச்சான்னு தெரியலை. முதல் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுட்டேன். அதுக்கே நிறையக் கடன் வாங்கிட்டேன். அதை எல்லாம் எப்படித் திருப்பி அடைக்கப்போறேன்னு தெரியலை. மூணாவது பொண்ணு கார்த்திகா எம்.காம். முடிச்சுட்டு சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்த்துட்டு இருக்கா. கடைசிப் பொண்ணு அங்கையற்கண்ணி எம்.எஸ்.சி. ஃபைனல் இயர் படிக்கிறா. ரெண்டு பேருக்கும் அரசு வேலை கொடுத்து, அவங்க வாழ்க்கையில் அம்மா ஒளி ஏத்திவைச்சா, காலம் முழுக்க நன்றி உள்ளவனா இருப்பேன்'' என்று ஒரு தகப்பனாக வேண்டுகோள் வைத்தார் முத்துக்கிருஷ்ணன்.

ஜெயலலிதா மனம் வைக்கட்டும்!

- ஆர்.லோகநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு