Published:Updated:

'சின்னம்மா வாயைத் திறந்தால்..?''

எகிறும் திவாகரன் ஆதரவாளர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

திவாகரனைக் கைது செய்வது இத்தனை பெரிய போராட்டமாக இருக்கும் என்று போலீஸார் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். 10 நாட்களுக்கு மேலும் போலீஸுக்குத் தண்ணி காட்டி வருகிறார். அதனால் வேறுவழி தெரியாமல், திவாகரனின் மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது போலீஸ். 

ஜாமீன் மறுப்பும், சரண் எதிர்பார்ப்பும்...

'சின்னம்மா வாயைத் திறந்தால்..?''

கஸ்தூரியின் வீட்டை இடித்த வழக்கில் கடந்த 21-ம் தேதி திவாகரனைப் பிடிக்க முயற்சி செய்தது போலீஸ். தகவல் தெரிந்ததும் தப்பினார். 23-ம் தேதி, திவாகரன் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 31-ம் தேதி மனு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், ''விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், முன்ஜாமீன் வழங்கக் கூடாது. கஸ்தூரி குடிஇருந்த வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கி உள்ளனர். குற்றச்செயல் தீவிரமானது'' என்று பலத்த ஆட்சேபம் தெரிவித்தார்கள். அதனால், திவாகரனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் திவாகரன் சரண் அடையக்கூடும் என்று தகவல் கிடைக்கவே... அனைத்து நீதிமன்றங்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு ஏமாந்து போனார்கள்.

ஹேமலதாவுக்கு அழைப்பு!

திவாகரனைப் பிடிக்க முடியாத காரணத்தால், அவரது நண்பர்களையும் உறவினர்களையும் வரவழைத்து சகலவிதங்களிலும் விசாரித்துப் பார்த்தது போலீஸ். ஆனால், உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், பிப்ரவரி 1-ம் தேதி மதியம் மன்னார்குடி டி.எஸ்.பி கணேசன் தலைமை யிலான போலீஸ் டீம், சுந்தரக்கோட்டைக்குச் சென் றனர். வீட்டில் இருந்த திவாகரனின் மனைவி ஹேம லதாவிடம் நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகச் சொல்லி சம்மன் கொடுத்தனர்.

அன்று மாலை 4.30 மணிக்கே டி.எஸ்.பி. கணே சனைச் சந்தித்தார் ஹேமலதா. உடன் வந்திருந்த திவாகரனின் உறவினர் கௌதமன் தவிர மற்ற அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர். அதற்குப் பின் தொடர்ந்து நடந்த மூன்று மணி நேர விசாரணையில், அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்க... எல்லாவற்றுக்கும் சளைக்காமல் பதில் சொன்னார் ஹேமலதா. பெரும்பாலான கேள்விகளுக்கு, 'குடும்பப் பொறுப்பு மட்டுமே என்னுடையது. வெளிவிவ காரம் எனக்குத் தெரியாது’,  'நினைவு இல்லை’ என்பதாகவே இருந்ததாம்.

கடைசியாக போலீஸார், ''திவாகரனை ஒழுங்காகச் சரணடையச் சொல்லுங்கள். இல்லை என்றால் வெளியூரில் படிக்கும் உங்கள் மகன் ஜெயஆனந்தையும், மகள் ராஜமாதங்கியையும் அழைத்து விசாரிக்க வேண்டி இருக்கும்...’ என்று மிரட்டலாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் அசராத ஹேமலதா, ''அவசியம் ஏற்பட்டால் வரும் 5-ம் தேதி அவர்களையும் விசாரணைக்கு அழைத்துவர முயற்சிக்கிறேன்...'' என்றாராம்.

'சின்னம்மா வாயைத் திறந்தால்..?''

எஸ்.பி. அலுவலகத்தில் தேடப்படும் குற்றவாளி?

ஹேமலதாவுடன் வந்த வழக்கறிஞர் தமிழரசனிடம் பேசினோம். ''ஹேமலதாவிடம் ஏற்கனவே போலீஸ் விசாரித்துவிட்டது. இப்போது சம்மன் கொடுத்து அழைத்ததால், அவர் ஸ்டேஷனுக்குச் சென்றார். கோயில் இடத்தில் கட்டிய வீட்டை இடித்தது அதிகாரிகள். அதிகாரிகள்தான் அதற்குப் பதில்

'சின்னம்மா வாயைத் திறந்தால்..?''

சொல்ல வேண்டும். ஆனால், திவாகரன் பலிகடா ஆக்கப்படுகிறார். புகார்தாரர் கஸ்தூரியை எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து வந்த தமிழார்வன், பழைய வழக்கு ஒன்றில் தலைமறைவுக் குற்றவாளி. இதில் இருந்தே இது பொய்வழக்கு என்று தெரியவில்லையா..?’ என்றார்.

தமிழார்வனோ, ''வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. கஸ்தூரியை மிரட்டி வழக்கை வாபஸ் வாங்கவைக்கச் சிலர் முயற்சித்தார்கள். ஆகவே நான் அவரைப் பாதுகாத்து வருகிறேன். எனக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்'' என்றார்.

குடும்பப் பெண்ணுக்கு அவமானம்...

ஸ்டேஷனுக்கு வெளியே கூடியிருந்த திவாகரனின் ஆதரவாளர்கள், ''யார் ஆட்சி யில் இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் சிலர் சம்பாதிக்கத்தான் பார்ப்பாங்க. அதுக்காக எதையும் நியாயப்படுத்தலை. கூப்பிட்டு எச்சரிக்கை செஞ்சு அனுப்பி இருக்கலாம். அதை விட்டுட்டு, இத்தனை நாள் கூடவே இருந்து சேவகம் செஞ்சவங்க குடும்பப் பெண்களை ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, அவமானப்படுத்துறது துரோகம். இத்தனை நாளும் அந்தம்மா ஒருத்தரே தமிழ்நாடு முழுக்க கட்சியைக் கட்டுப்பாட்டில் வெச்சிரு ந்தாங்களா? மன்னார்குடி உறவுகள் இருக்கப்போய்தானே அது சாத்தியம் ஆச்சு? இப்ப டெல்டாவில் அமைச்சர் களாக இருக்கிற எத்தனை பேர் அந்தப் பதவிக்காக பாஸ் கிட்ட பவ்யம் காட்டி இருப்பாங்க? சின்னம்மாவை கார்டனை விட்டு அனுப்பி எவ்வளவு நாள் ஆச்சு? அவங்க ஒரு வார்த்தை மீடியாகிட்ட பேசி இருப்பாங்களா? சின்னம்மா வாயைத் திறந்தா, நிலைமை என்ன ஆகும்? எங்க பொறுமையை சோதிக்காதீங்க. எல்லாத் துக்கும் ஒரு எல்லை உண்டு...'' என்றார்கள் ஆக்ரோஷமாக!

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு