Published:Updated:

`ஆதாரமற்ற புகார்!' - இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் தொடர்ந்த பாலியல் வழக்கு தள்ளுபடி

`ஆதாரமற்ற புகார்!' - இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் தொடர்ந்த பாலியல் வழக்கு தள்ளுபடி
`ஆதாரமற்ற புகார்!' - இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் தொடர்ந்த பாலியல் வழக்கு தள்ளுபடி

`ஆதாரமற்ற புகார்!' - இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் தொடர்ந்த பாலியல் வழக்கு தள்ளுபடி

இன்ஸ்பெக்டர் மீது போடப்பட்ட பாலியல் வழக்கு பொய்யானது என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

`ஆதாரமற்ற புகார்!' - இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் தொடர்ந்த பாலியல் வழக்கு தள்ளுபடி

சென்னை சூரப்பட்டுப் பகுதியைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் மீது ஜெய்கரன் என்பவர் போலீஸில் மோசடி புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் தொடர்பாக ராதிகாவிடம் விசாரணை நடத்த புழல் காவல் நிலையத்துக்குக் காவல் ஆய்வாளர் நட்ராஜ் வரச்சொல்லி இருந்தார். அப்போது ராதிகாவுடன் அவரின் மகளும் சென்றிருந்தார். ராதிகாவிடம் விசாரணை முடித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் 07.05.2019 அன்று விசாரணைக்கு என்று அழைத்து தன் மகளிடம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் பாலியல் ரீதியாக நடந்துகொண்டார் என்று திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ராதிகாவின் மகள் வழக்கு தொடர்ந்தார். அதில், காவல் ஆய்வாளர் நட்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரணிதரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்தப் புகார் அடிப்படை ஆதாரமற்ற நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று கருதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பு குறித்து இன்ஸ்பெக்டர் நட்ராஜிடம் பேசியபோது, ``அந்தப் பெண் என் மீது  கூறிய குற்றசாட்டுக்கள் அனைத்தும் பொய். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆதாயத்தோடு இது போன்ற பெண்களை வைத்து ஒரு சில வக்கீல்கள் பொய்யாக வழக்கு போட்டு களங்கம் விளைவிக்கிறார்கள். தற்போது நீதிமன்றம் அந்தப் பெண் சொன்ன புகாரில் உண்மை இல்லை.  அந்தப்பெண். என் மீது பொய் வழக்கு போட்டுள்ளார் என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. சொந்த அப்பா மீதே அந்தப் பெண் பாலியல் வழக்கு போட்டுள்ளது. அப்படியென்றால் அந்தப் பெண் எப்படிப்பட்டவர் என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்'' என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

இது குறித்து ஜெய்கரன் தரப்பு வழக்கறிஞர் ஜெஸ்பர் பிரபுவிடம் கேட்டபோது, "ராதிகாவின் மகள் புழல் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் மீது பொய்யான பாலியல் வழக்கை திருவள்ளூர் மாவட்ட பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அது ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டு என்று நீதிபதி பரணிதரன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இன்ஸ்பெக்டர் மீதே ஒரு பெண் பொய் வழக்கு போடுவதற்கு யார் பின்னணி என்று பார்க்க வேண்டும். ஜெய்கரன் மீது போடப்பட்டுள்ளதும் பொய் வழக்குதான். அவரிடம் உள்ள சொத்துகளை அபகரிக்கவே போடப்பட்ட பொய் நாடகம். இது பொய் வழக்கு என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது" என்று கூறினார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு