Published:Updated:

மிரட்டும் திவாகரன்... துரத்தும் சுதாகரன்!

நிர்வாண சாமியாரின் அடுத்த அட்டாக்

பிரீமியம் ஸ்டோரி

'சசிகலாவின் உறவினர்​களான திவாகரன் மற்றும் சுதாகரனால் எனது உயிருக்கு ஆபத்து’ என்று, திவாகரனைச் சபித்ததாகச் சொல்லப்பட்ட மன்னார்குடி நிர்வாணச் சாமியாரான ராஜசேகர் என்ற சித்திரை 'பகீர்’ புகாரைக் கொடுத்து இருக்கிறார்!

அதுசரி, மன்னார்குடி சாமியார் மதுரைக்கு வந்தது எப்படி?

'மக்கள் முன்னேற்றக் கட்சி’ என்ற அமைப்பை நடத்தும் மதுரையைச் சேர்ந்த முத்துராஜ், சாமியாரை வைத்துக்கொண்டு நம்மிடம் பேசினார். ''எனக்கு கிட்னியில பிரச்னை இருந்துச்சு. அதை மருந்தே இல்லாம குணப்படுத்திய மகான் இவர். திவாகரன் விவகாரத்தால் இவரை போலீஸ் பிடித்துப் போய், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்து, கூனிக்குறுகிக் கெடந்த ஐயாவைப் பார்த்துப் பதறிட்டேன். அவரைக் கூட்டிவந்தப்ப, சிலர் எங்களை ஃபாலோ செஞ்சாங்க. அதனால மாறுவேஷம் போட்டு ஐயாவை மன்னார்குடிக்கு கூட்டிட்டுப் போனோம். இவரைக் கொல்ல நினைச்சவங்க சாப்பாட்டுல ஸ்லோ பாய்ஸன் மாதிரி எதையோ கலந்துட்டாங்க. அதனால, ரத்தம் ரத்தமாப் போக ஆரம்பிச்சது. அங்க வெச்சிருந்தா சரிப்பட்டு வராதுனு, ஐயாவை திருப்பரங்குன்றத்தில் இருக்கிற கட்டிக்குளம் மாயாண்டிசாமி கோயிலுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்.

மிரட்டும் திவாகரன்... துரத்தும் சுதாகரன்!
மிரட்டும் திவாகரன்... துரத்தும் சுதாகரன்!

'என்னை அடிச்சவன் தேடிக்கிட்டு வர்றாண்டா. குன்றத்​துல அவனு​களுக்கு கூட்டுக்கை இருக் குன்’னு சொன்னார். அதனால, தஞ்சாவூர்ல  போய் தங்கிட்டோம். அவர் சொன்ன மாதிரி​யே, 30-ம் தேதி காலையில 10 பேருடன் சுதாகரன், மாயாண்டி கோயிலுக்குப் போயிருக்​கார். மன்னார்குடி கும்பல் என்ன வேணும்னாலும் செய்வாங்க. அதனாலதான் கமிஷனர்கிட்ட புகார் குடுத்தோம்'' என்று நிறுத்தினார்.

போலீஸ் தரப்பிலோ, ''முத்துராஜ் சொல்வது எதுவுமே நம்பும்படியாக இல்லை. சாமியாரை வெச்சு வருமானம் பார்க்கிறதுக்குத்தான் இப்படி எல்லாம் பண்றதா சந்தேகிக்கிறோம்'' என்கிறார்கள். கமிஷனர் கண்ணப்பனிடம் கேட்டதற்கு, ''முத்துராஜின் புகாரில் உண்மை இருந்தால், போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்றதோடு நிறுத்திக்கொண்டார்.

திவாகரனைத் தண்டிக்க முடிவு செய்து​விட்​டால், இந்தப் புகாரும்கூட ஓர் ஆயுதம் ஆகலாம்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு