Published:Updated:

`ஒரு டன் கடல் அட்டைகள்; மதிப்பு ரூ.15 லட்சம்!' - தூத்துக்குடியில் நடந்த அதிரடி வேட்டை

`ஒரு டன் கடல் அட்டைகள்; மதிப்பு ரூ.15 லட்சம்!' - தூத்துக்குடியில் நடந்த அதிரடி வேட்டை
News

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

`ஒரு டன் கடல் அட்டைகள்; மதிப்பு ரூ.15 லட்சம்!' - தூத்துக்குடியில் நடந்த அதிரடி வேட்டை

வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடா கடல்பகுதி பாதுகாக்கப்பட்ட உயிரிக்கோளப் பகுதியாகும். உலகில் உள்ள பவளப்பாறைகளில் 17 சதவிகிதம் மன்னார்வளைகுடா பகுதியாக உள்ளது. இதில், பல்வேறு அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல்பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்பசு, கடல்குதிரை, பால்சுறா, கடல் அட்டை உள்ளிட்ட 53 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும் வைத்திருக்கவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

`ஒரு டன் கடல் அட்டைகள்; மதிப்பு ரூ.15 லட்சம்!' - தூத்துக்குடியில் நடந்த அதிரடி வேட்டை

இருந்தபோதிலும், இந்தத் தடையை மீறி  பலவித மருந்துகள் தயாரிப்பதற்காகக் கடல் அட்டைகளைப் சட்டவிரோதமாகப் பிடித்து உயிருடனும் பதப்படுத்தியும் இலங்கைக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் பணியிலும் வன உயிரினப் பாதுகாப்புத்துறை, கடலோர பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட பலரும் தீவிரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தாலும் கடல் அட்டைக் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

`ஒரு டன் கடல் அட்டைகள்; மதிப்பு ரூ.15 லட்சம்!' - தூத்துக்குடியில் நடந்த அதிரடி வேட்டை

இந்நிலையில், தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தருவைகுளம் மரைன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிபடையில், ஆய்வாளர் நவீன் தலைமையிலான போலீஸார் லூர்தம்மாள்புரத்தில் உள்ள ஜெயகுமார் என்பவருக்குச் சொந்தமான குடோனில் சோதனை நடத்தினர். பதப்படுத்தப்பட்ட நிலையில் கடல் அட்டைகள், பிளாஸ்டிக் டிரம்களில் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 1 டன் எடை உடைய அக்கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மீராசா, திரேஸ்புரம்பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இக்கடல் அட்டைகள் இங்கு பதப்படுத்தப்பட்டு ராமேஸ்வரம் வழியாக, இலங்கைக்குக் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட இருந்த மினிவேன் மற்றும் பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்தக் கடல் அட்டைகளின் இந்திய மதிப்பு, ரூ.15 லட்சம் வரை இருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் முடியும் வரை கடல் அட்டைகள் கடத்தல் சம்பவம் ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.