தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கொலை - நண்பர்களிடம் விசாரணை! | youth murder in aruppukottai

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (02/06/2019)

கடைசி தொடர்பு:15:17 (02/06/2019)

தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கொலை - நண்பர்களிடம் விசாரணை!

அருப்புக்கோட்டையில் இரவு தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 11 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னபுளியம்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (19). கூலித் தொழிலாளியான இவர் நேற்று இரவு மயானம் செல்லும் சாலையில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை பால்கறக்க வந்த பால்க்காரர் ஒருவர் பார்த்தபோது, கருப்பசாமி அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை காவல்துறைக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கருப்பசாமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர். முன் விரோதத்தால் இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நண்பர்கள் 11 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.