Published:Updated:

எஸ்.ஐயுடன் சிக்கிய பெண் போலீஸ்: டீல் பேசிய டி.எஸ்.பி - பொள்ளாச்சியிலிருந்து இன்னொரு பாலியல் புகார்

எஸ்.ஐயுடன் சிக்கிய பெண் போலீஸ்: டீல் பேசிய டி.எஸ்.பி - பொள்ளாச்சியிலிருந்து இன்னொரு பாலியல் புகார்
எஸ்.ஐயுடன் சிக்கிய பெண் போலீஸ்: டீல் பேசிய டி.எஸ்.பி - பொள்ளாச்சியிலிருந்து இன்னொரு பாலியல் புகார்

எஸ்.ஐயுடன் சிக்கிய பெண் போலீஸ்: டீல் பேசிய டி.எஸ்.பி - பொள்ளாச்சியிலிருந்து இன்னொரு பாலியல் புகார்

அ.தி.மு.கவின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்த கொங்கு மண்டலம், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் நொறுங்கிப்போயிருக்கிறது. நொந்து போயிருக்கிறார்கள் ஆளும்கட்சித் தொண்டர்கள். மற்ற தொகுதிகளை விட, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க அடைந்துள்ள மாபெரும் தோல்வி, அக்கட்சியினரை நிலைகுலைய வைத்துள்ளது. ஏனெனில் தமிழகத்திலேயே பெஸ்ட் எம்.பி என்று பெயர் வாங்கியவர் பொள்ளாச்சி எம்.பியாக இருந்த மகேந்திரன். அவரின் முயற்சியாலும், அவருடைய காலத்திலும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்குப் பணிகள் நடந்துள்ளன. எல்லாக்கட்சியினரும் பாராட்டக்கூடிய ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர் வலம் வந்தார். இதே நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்துார் சட்டமன்றத் தொகுதியும் வருகிறது. இத்தனை பாசிட்டிவ் காரணங்கள் இருந்தும் இங்கேயும் அ.தி.மு.க செம்மஅடி வாங்கியுள்ளது.

இவ்வளவு பெரிய தோல்விக்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக போலீஸார் நடந்து கொண்டவிதம்தான் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமென்று அ.தி.மு.க நிர்வாகிகளே பகிரங்கமாகப் பேச ஆரம்பித்துள்ளனர். கொங்கு மண்டலம் முழுவதும் அ.தி.மு.க பெற்றுள்ள தோல்வியிலும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் காங்கேயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாரப்பன் கடிதமே எழுதியுள்ளார். 

எஸ்.ஐயுடன் சிக்கிய பெண் போலீஸ்: டீல் பேசிய டி.எஸ்.பி - பொள்ளாச்சியிலிருந்து இன்னொரு பாலியல் புகார்

இது ஒருபுறமிருக்க, இந்தத் தோல்விக்கு அ.தி.மு.கவின் முக்கியப் புள்ளிகளை விட ஒரு சில போலீஸ் அதிகாரிகளுக்கே பெரும்பங்கு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக புதிது புதிதாக எழுந்து வரும் பாலியல் புகார்களை இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள் ஆளும்கட்சியினர். இதை கோவையைச் சேர்ந்த போலீஸார் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். 

கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் இதுபற்றி விசாரித்தோம்...

``பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.கவினர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவுக்கு அங்கு தோல்வி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு முதற்காரணம், முன்பிருந்த எஸ்.பி பாண்டியராஜன்தான். ஐ.பி.எஸ் அந்தஸ்து கூட பெறாத அவரை ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகர்தான் தன்னுடைய வசதிக்காக கோவை எஸ்.பியாகக் கொண்டு வந்தார்.

எஸ்.ஐயுடன் சிக்கிய பெண் போலீஸ்: டீல் பேசிய டி.எஸ்.பி - பொள்ளாச்சியிலிருந்து இன்னொரு பாலியல் புகார்

அவர் மட்டுமன்றி ஏ.டி.எஸ்.பி, எஸ்.பி அலுவலக இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பிக்கள், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் என எல்லோருமே ஆளும்கட்சிக்கு வேண்டியவர்களாகவே தொடர்ந்து நியமிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் மக்களுக்குப் பாதுகாப்பு தருவதைவிட, ஆளும்கட்சியினருக்குச் சேவகம் செய்வதிலேயே நேரம் செலவழித்து வந்தனர். இதுவே மக்களின் வெறுப்பு அதிகரிக்க ஒரு காரணமாகிவிட்டது.

ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகருக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரிதான், கோவை மண்டலத்தில் போலீஸ் அதிகாரிகள் பணி மாறுதலை முடிவு செய்யும் அளவிற்கு அதிகாரம் பெற்றிருக்கிறார். இதேபோன்று டி.எஸ்.பிக்கள் சிலரும் ஆளும்கட்சி ஆதரவாளர் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும் கலெக்ஷன் செய்வதிலுமே குறியாக இருக்கின்றனர். இவர்கள் செய்யும் எந்தத் தவறுக்கும் மேலதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கமுடிவதில்லை.
கோவை மாநகர காவல்துறையில் உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ஒருவர், ஒரு குற்றச்சாட்டின் பெயரில் இங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்தபின்பு, எங்கேயோ ஆளைப்பிடித்து மீண்டும் கோவைக்கு வந்துவிட்டார். கோவையையொட்டியுள்ள ஒரு பெரிய ஊரில் இப்போது அவர் டி.எஸ்.பியாக இருக்கிறார்.

எஸ்.ஐயுடன் சிக்கிய பெண் போலீஸ்: டீல் பேசிய டி.எஸ்.பி - பொள்ளாச்சியிலிருந்து இன்னொரு பாலியல் புகார்

வாக்கு எண்ணிக்கை நடந்த நாளன்று பொள்ளாச்சிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்குப் பணி நிமித்தமாகச் சென்ற அவர், இரவில் மீண்டும் கோவை திரும்பும்போது, ரோட்டோரத்தில் ஒரு கார் நிற்பதைப் பார்த்து வண்டியை நிறுத்தி அந்த காரை `செக்’ செய்துள்ளார். அதற்குள் சீருடை அணிந்த ஒரு பெண் காவலரும், மப்டியில் ஒரு எஸ்.ஐயும் நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் இவரது லிமிட்டில் பணியாற்றுபவர்களில்லை. இருவரையும் விசாரித்து எச்சரித்து அனுப்பிவிட்டுப் போய்விட்டார் அந்த டி.எஸ்.பி. ஆனால் மறுநாளிலிருந்து அந்தப் பெண் காவலருக்கு வாட்ஸ் அப்களில் `கிஸ் ஸ்மைலி’ படங்களையும், மெசேஜ்களையும் அனுப்பி `லவ் டார்ச்சர்’ கொடுக்க ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அந்தப் பெண் காவலர், அந்த டி.எஸ்.பி அனுப்பிய படங்களையும் குறுஞ்செய்திகளையும் `ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து, தான் வேலை பார்க்கும் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் காட்டியுள்ளார். அவர் மூலமாக அந்தத் தகவல் எஸ்.பியின் காதுகளுக்கும் போயிருக்கிறது. ஆனால் ஆளும்கட்சி செல்வாக்குள்ள அவரை எதுவும் கேட்க முடியாமல் அந்த இன்ஸ்பெக்டரின் மூலமாக சிறு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. 

இவரைப்போல பொள்ளாச்சியில் வேலை பார்க்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு சப்–இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனுக்குப் புகார் சொல்ல வரும் பல பெண்களை மிரட்டி பணிய வைத்திருக்கிறார். அவரும் ஆளுங்கட்சியினருக்கு மிகவும் நெருக்கமானவர்தான். இப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்தால், பெண்கள் எப்படி புகார் கொடுப்பதற்கு நம்பிக்கையோடு போலீஸ் ஸ்டேஷன் வருவார்கள்?
இப்போதுள்ள எஸ்.பி சுஜித்குமார், நல்ல அதிகாரிதான். அவரை ஆளும்கட்சியினர் செயல்படவிடுவதில்லை. ஒத்துவராததால் அவரை மாற்றுவதற்கும் தீவிரமான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது’’ என்றனர்.

தற்போது பொள்ளாச்சி பாலியல் விவகாரம், சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது. ஆனால் ஊடகங்களின் கவனத்துக்கு வராமலும், போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்படாமலும் ஏராளமான பாலியல் புகார்கள் மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு, கொங்கு மண்டல மக்களின் மனதில் ஆழமாகப் பதியும் அளவுக்கு எதிர்க்கட்சியினர், இந்தத் தேர்தலில் பரப்புரை செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்துள்ள படுதோல்விக்குப் பின்பாவது, இந்தக் குற்றச்சாட்டிலுள்ள உண்மை, பொய்களை ஆராய்ந்து தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் இனி ஆளும்கட்சியை நம்புவர்.
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு