Published:Updated:

10-ம் வகுப்பில் 461.. 12-ம் வகுப்பில் 490..! - நீட் தோல்வியால் திருப்பூர் மாணவி தற்கொலை

குருபிரசாத்
10-ம் வகுப்பில் 461.. 12-ம் வகுப்பில் 490..! - நீட் தோல்வியால் திருப்பூர் மாணவி தற்கொலை
10-ம் வகுப்பில் 461.. 12-ம் வகுப்பில் 490..! - நீட் தோல்வியால் திருப்பூர் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், திருப்பூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

10-ம் வகுப்பில் 461.. 12-ம் வகுப்பில் 490..! - நீட் தோல்வியால் திருப்பூர் மாணவி தற்கொலை

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். பனியன் கம்பெனியில் டெய்லராக இருந்து வருகிறார். அவரின் மனைவி ராஜலட்சுமியும் அங்குள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகளான ரிதுஸ்ரீ, ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துள்ளார். மேலும், அவர் நீட் தேர்வும் எழுதியிருந்தார். நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், குறைந்த மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்ததால் ரிதுஶ்ரீ வேதனையடைந்துள்ளார்.

10-ம் வகுப்பில் 461.. 12-ம் வகுப்பில் 490..! - நீட் தோல்வியால் திருப்பூர் மாணவி தற்கொலை

இதையடுத்து, வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார். இதை முதலில் பார்த்த பக்கத்துவீட்டில் இருந்தவர்கள், மற்றவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ரிதுஶ்ரீ 10-ம் வகுப்பில் 461 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களிடம் பேசிய அவரின் தாய் ராஜலட்சுமி,``என் பொண்ணு ரொம்ப தைரியமான பொண்ணு. எப்பவும் பக்கத்துவீட்டில் இருக்கும் குழந்தைகளுடன்தான் விளையாடிக் கொண்டிருப்பாள். இன்றும் விளையாடிக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். எந்த விஷயத்துக்காகவும் கலங்க மாட்டா. ரிசல்ட் வரப்போகுதுனு காலைல இருந்தே சொல்லிட்டு இருந்தா. ஆனா, முடிவைப் பார்த்து மனசு உடைஞ்சு போயிட்டா. அதனால, இந்த முடிவை எடுத்துட்டா. மெடிசன் லைன்ல படிக்கணும்னு நினைச்சுட்டு இருந்தா'' என்று கதறினார். நீட் தேர்வில் ரிதுஸ்ரீ 68 மதிப்பெண் பெற்றிருந்தார்.

Vikatan