‘எங்ககிட்ட திருட எப்படி மனசு வருதுனே தெரியல!’ - வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குமுறல் | 10 cell phones theft in vellore govt hospital

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:12:40 (07/06/2019)

‘எங்ககிட்ட திருட எப்படி மனசு வருதுனே தெரியல!’ - வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குமுறல்

வேலூர் அரசு மருத்துவமனையில், ஒரே நாளில் நோயாளிகளிடமிருந்து 10 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக வருபவர்களின் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்காமல், மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டுவருவதாக நோயாளிகள் குமுறுகிறார்கள்.

வேலூர் அரசு மருத்துவமனை

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இங்கு, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் புகுந்த மர்ம நபர்கள், 10 செல்போன்களை திருடிச்சென்றிருக்கிறார்கள். செல்போன்களைப் பறிகொடுத்த நோயாளிகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவுட் போஸ்ட் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். பெண் ஒருவர்மீது சந்தேகம் தெரிவித்தனர்.

ஆதாரமில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரிக்க முடியாது என்று போலீஸார் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இந்த அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் செல்போன்கள் மற்றும் உடைமைகள் திருடுபோவது, இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே பலமுறை நடந்திருக்கிறது. இந்த திருட்டுச் சம்பவங்களை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. அவுட் போஸ்ட் போலீஸாரும் மருத்துவமனை வளாகத்தில் இரவு ரவுண்ட்ஸ் வருவதில்லை என்று நோயாளிகள் புகார் கூறுகிறார்கள்.