Published:Updated:

முகநூலில் ஆபாசப் பதிவு - மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்!

முகநூலில் ஆபாசப் பதிவு - மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்!
முகநூலில் ஆபாசப் பதிவு - மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்!

நெய்வேலி அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி குறித்து முகநூலில் ஆபாச பதிவு போட்டதால் இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட மனவேதனையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முகநூலில் ஆபாசப் பதிவு - மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் ராதிகா (19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே ஊரில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும், ராதிகாவின் அத்தை மகன் விக்னேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரேம்குமார் முகநூலில் ராதிகா குறித்து ஆபாசப் பதிவு போட்டுள்ளார். இதையறிந்த ராதிகாவும் அவரைத் திட்டி பதிவிட்டுள்ளார். இதனால் பிரேம்குமார் தனது உறவினர்களுடன் வந்து ராதிகா வீட்டில் பிரச்னை செய்துள்ளார். பின்னர் ராதிகா உறவினர்களும் பிரேம்குமார் வீட்டுக்குச் சென்று பிரச்னை செய்துள்ளனர். 

முகநூலில் ஆபாசப் பதிவு - மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்!

இதற்கிடையே முகநூல் பதிவால் தொடர்ந்து மனவேதனையில் இருந்துவந்த ராதிகா தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். ராதிகா தற்கொலை செய்துகொண்டதை அறிந்த அவரின் அத்தை மகன் பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (21) ராதிகாவைப் பார்க்க மனமின்றி வரும் வழியில் செங்கால்பாளையம் கிராமத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். ராதிகாவை விக்னேஷ் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ராதிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையிலும், விக்னேஷ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. முகநூல் பதிவால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசாஸார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் ராதிகா உறவினர்கள் பிரேம்குமாரை கைது செய்ய வலியுறுத்தி விருத்தாசலம் - கடலூர் சாலையில் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முகநூலில் ஆபாசப் பதிவு - மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்!

அப்போது மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் செய்தியாளர்கள் சிலர் காயமடைந்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் ராதிகா உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Vikatan
பின் செல்ல