Published:Updated:

`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல!'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன்

`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல!'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன்
`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல!'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன்

`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல!'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன்

குழந்தை அடிபட்டு வீட்டில் கிடக்குது உனக்கு டிக் டாக் வீடியோ பெருசா போச்சானு கணவன் திட்ட. ஆத்திரத்தில் அவரது  மனைவி விஷம் குடிப்பதையும் டிக் டாக் கில் வீடியோ எடுத்து அவரது கணவருக்கு அனுப்பி அவரது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல!'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா. இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பச் சூழல் காரணமாக பழனிவேலு சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா கணவர் ஊரான சீரா நத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது. தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாகக் காட்டுவது போன்றவற்றை டிக்டாக்கில் பதிவிட்டு அதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.

அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயமடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் போனிலேயே குறியாக இருந்துள்ளார் அனிதா.

`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல!'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன்

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதைத் தனது கடைசி விருப்பமாக டிக்டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்து வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்த அவர், பின்னர் தண்ணீரைக் குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படிப் பட்ட வீடியோவை எடுத்து அவர் கணவருக்கே அனுப்புகிறார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாய் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் நடுத்தெருவில் ஆதரவற்ற நிலையில் நிற்கின்றனர்.
டிக் டாக் கால் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ தெரியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம், ``எங்கள் பயனாளர் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்த துயர சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். டிக்டாக் பயனாளர்கள் அனைவருக்கும், ஆப் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். பயனாளர்களின் அனைத்து கற்பனை வளங்களுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதேசமயம், பயனாளர்களுக்கோ அல்லது பிறருக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு வீடியோவையும் எங்களின் ஆப் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் ஊக்குவிப்பதில்லை" எனத் தெரிவித்துள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு