`அவளைக் கட்டிவைத்து அடிங்க' - கடனைச் செலுத்தாத பெண்ணுக்கு நேர்ந்த கந்துவட்டிக் கொடுமை! #video | karnataka Woman tied to pole, harassed for repaying loan

வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (14/06/2019)

கடைசி தொடர்பு:12:06 (14/06/2019)

`அவளைக் கட்டிவைத்து அடிங்க' - கடனைச் செலுத்தாத பெண்ணுக்கு நேர்ந்த கந்துவட்டிக் கொடுமை! #video

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததற்காக 36 வயது பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தில் இருக்கிறது கொடிகேஹள்ளி. இந்த ஊரைச் சேர்ந்த பெண் ராஜாமணி. 36 வயதாகும் இவர் இதே ஊரில் சிறிய ஹோட்டல் ஒன்றும் சிட்பண்ட் பிசினஸும் நடத்தி வருகிறார். இதற்கிடையே, சமீபத்தில் அந்த ஊரில் சிலரிடம் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடனை திருப்பிச் செலுத்தாததற்காக நேற்று ராஜாமணியை கடன் கொடுத்த சிலர் மின்கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர். நீண்ட நேரமாக மின்கம்பத்தில் கட்டிவைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். அவரைக் கட்டிவைத்துள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாக, இதற்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. வீடியோவில், ``அவளைச் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடியுங்கள்'' எனச் சிலர் உரக்கச் சொல்கின்றனர். 

இதற்குக் கண்டனங்கள் எழ, இந்த விவகாரத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதல்கட்டமாக மின்கம்பத்தில் கட்டிவைத்த 7 பேரைக் கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி  வருகின்றனர். கந்துவட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நேரத்தில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதற்காக பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க