Published:Updated:

`இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 கொடுத்தா சாராயம் விற்கட்டும்!’ - நாகையில் காவலர் சஸ்பெண்டு

`இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 கொடுத்தா சாராயம் விற்கட்டும்!’ - நாகையில் காவலர் சஸ்பெண்டு
`இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 கொடுத்தா சாராயம் விற்கட்டும்!’ - நாகையில் காவலர் சஸ்பெண்டு

`இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 கொடுத்தா சாராயம் விற்கட்டும்!’ - நாகையில் காவலர் சஸ்பெண்டு

நாகை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், கள்ளச்சாராய விற்பனைக்கு மாமூல் பேசிய விவகாரத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 கொடுத்தா சாராயம் விற்கட்டும்!’ - நாகையில் காவலர் சஸ்பெண்டு

ஆனைக்காரன் சத்திரம் சிறப்பு உதவி- ஆய்வாளர் சேகர், வடரெங்கத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ஒருவருடன், சாராயம் விற்பனை செய்ய காவல் நிலையத்திற்குத் தரவேண்டிய லஞ்சப் பணம் குறித்து பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. 
``போன மாசமும் அவன் பணம் கொடுக்கல. அதுக்கு முதல் மாசமும் பணம் கொடுக்கலை. அந்த ரெண்டு மாச பணமும் வரணும். இனி இரண்டாயிரம், மூவாயிரம் அயிட்டம்தான் தேவையில்லை. முன்னெல்லாம் ஸ்டேஷன்ல 15 போலீஸ்தான் இருந்தாங்க. இப்போ 25 போலீஸ் இருக்காங்க. அதனால இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000, போலீஸுக்கு ரூ.5,000 இதைக் கொடுக்குற மாதிரி இருந்தா அவன் சாராயம் விற்கட்டும். இல்லன்னா விற்க வேண்டாம்" -- சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரின் இந்தப் பேச்சால் ரூ.10,000 காவல் நிலையத்திற்கு தந்தால் யார் வேண்டுமானாலும் சாராயம் விற்றுக் கொள்ளலாம் என்ற காவல்துறை அவலநிலையைப் பறைசாற்றியது.

சேகர் இங்கு பணிக்கு வந்தது முதல் காவல் நிலையத்தில் காலெடுத்து வைத்தாலே கறாராய்ப் பணத்தைக் கறந்து விடுவாராம். கடந்த வாரம் நடராஜமணி என்ற அப்பாவியை ரவுடிகள் கார்த்தி, சத்யா ஆகியோர் பட்டப்பகலில் படுகொலை செய்தார்கள். அந்த ரவுடிகளை சாராய வியாபாரம் செய்ய அனுமதி அளித்தவர் சேகர்தான் என்கிறார்கள். இந்தக் கள்ளச்சாராய விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை இன்ஸ்பெக்டர் உட்பட அனைவரும் பிரித்துக்கொள்கின்றனர். இந்த விஷயத்தில் வசூல் மன்னர் சேகர் என்பதால் அவர் தலைமை வகித்துள்ளார்.

`இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,000 கொடுத்தா சாராயம் விற்கட்டும்!’ - நாகையில் காவலர் சஸ்பெண்டு

சேகர் பேசிய வாட்ஸ் அப் செய்தியை மாவட்ட எஸ்.பி. விஜயகுமாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். உடனடியாக ஆனைக்காரன் சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் விசாரணை அறிக்கை பெற்று சேகரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.சேகர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சில மணி நேரங்களில், சேகரின் மருமகன் குணசீலன் என்பவர் சீர்காழியை அடுத்துள்ள கீழஅகணியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அரவிந்தன் என்பவரை தொடர்பு கொண்டு, ``நீதான் எங்க மாமாவை (சேகர்) பற்றி வாட்ஸ் - அப்பில் செய்தி பரப்பினாயா..”என்று கேட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த அரவிந்தனுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகருக்கும் ஏற்கெனவே அடிதடியாகி வழக்கு ஒன்று  நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அரவிந்தன் "உன் ஊருக்கே வரேண்டா.. உன்னால் என்ன செய்ய முடியும்...” என்று கேட்டு, நேற்றிரவு திருவெண்காடு வந்து குணசீலனைச் சந்தித்து சண்டை போட்டிருக்கிறார். 

இருவருக்குமிடையே நடந்த சண்டையில் குணசீலன் அரிவாளை எடுத்து, அரவிந்தனின் இடதுபக்க தலை, நெற்றி, தாடை ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அரவிந்தன் தற்போது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். அரவிந்தனை சரமாரியாக வெட்டியதோடு, அரவிந்தன் கொண்டுவந்த டூவீலரையும் எடுத்துக்கொண்டு குணசீலன் தலைமறைவாகிவிட்டார். இப்பிரச்னையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகருக்கும் பங்குண்டு என்பதால் இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு