Published:Updated:

``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்

சிந்து ஆர்
``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்
``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்

கெட்டுப்போன தோசைமாவு வழங்கியது குறித்து தட்டிக்கேட்ட பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்துவருகிறார். இவர் நேற்று மாலை ஒரு கடையில் தோசை மாவு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் சென்று மாவு பாக்கெட்டைப் பார்த்தபோது அது மிகவும் கெட்டுப்போய் இருந்துள்ளது. இதையடுத்து, தோசை மாவை அதே கடையில் கொண்டு கொடுத்துள்ளார். தோசை மாவு கெட்டுப்போனதாகப் புகார் கூறியுள்ளார். இதில் தோசை மாவு விற்பனை செய்த கடையில் இருந்த பெண்ணின் கணவர் செல்வம் அங்கு வந்து ஜெயமோகனிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச் சென்ற கடைக்காரர் செல்வம் அங்குநின்று மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்

தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். புகாரின் பேரில் நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜெயமோகன் தனது இணையதளத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார், அதில், ``சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்துவிட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திருப்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார். நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவர் கணவர் நின்றிருந்தார். ஏற்கெனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறார்.

``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்

என்னைத் தாக்க ஆரம்பித்தார். தாடையில் அடித்தார். கீழே விழுந்தபோது உதைத்தார். என் கண்ணாடி உடைந்தது.. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னார். பின்னர் வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினார். வீட்டுக்குள் நுழைய முயன்றார். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

Vikatan