Published:Updated:

மாறியது டூவீலர்ஸ்; சிக்கியது இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி!- அதிர்ச்சியில் மீன்வாங்க வந்தவர் 

மாறியது டூவீலர்ஸ்; சிக்கியது இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி!- அதிர்ச்சியில் மீன்வாங்க வந்தவர் 
மாறியது டூவீலர்ஸ்; சிக்கியது இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி!- அதிர்ச்சியில் மீன்வாங்க வந்தவர் 

சென்னை வில்லிவாக்கத்தில் மீன்வாங்க வந்த டிரைவர், டூவீலரின் லாக்கரைத் திறந்தார். அப்போது அதற்குள் புல்லட்களுடன் கூடிய துப்பாக்கி இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் அது, சென்னையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் துப்பாக்கி என்று தெரியவந்தது. 

மாறியது டூவீலர்ஸ்; சிக்கியது இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி!- அதிர்ச்சியில் மீன்வாங்க வந்தவர் 

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சற்குணம். இவர் துறைமுகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மீன் வாங்க, வில்லிவாக்கம் மார்க்கெட்டுக்கு ரெட் கலர் டூவீலரில் வந்தார். மார்க்கெட்டுக்குள் சென்ற சற்குணம் மீனை வாங்கிவிட்டு டூவீலரை நிறுத்திய இடத்துக்கு வந்தார். டூவீலரில் மீனை வைக்க சீட்டின் கீழே உள்ள லாக்கரைத் திறந்தார். அப்போது அங்கு துப்பாக்கி இருந்ததைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து, அந்த டூவீலரையும் துப்பாக்கியையும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சற்குணம் ஒப்படைத்தார். அப்போது சார், என்னுடைய ரெட் கலர் டூவீலர் காணவில்லை என்றும் சற்குணம் கூறினார். இதனால் டூவீலரை யாரோ மாற்றி எடுத்துச் சென்றுவிட்டார்கள் என போலீஸார் கருதினர். டூவீலரில் இருந்த துப்பாக்கி, தமிழகக் காவல்துறையில் பயன்படுத்துவது என்பதை போலீஸார் கண்டறிந்தனர். சற்குணம் ஒப்படைத்த டூவீலரின் பதிவு நம்பரைக் கொண்டு அது யாருடையது என்பதை போலீஸார் விசாரித்தனர். அப்போது சென்னையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவருடையது என்று தெரியவந்தது. உடனடியாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் துப்பாக்கியை போலீஸார் ஒப்படைத்தனர். 

மாறியது டூவீலர்ஸ்; சிக்கியது இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி!- அதிர்ச்சியில் மீன்வாங்க வந்தவர் 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று ரெட் கலர் டூவீலரை துறைமுகத்தில் வேலை பார்க்கும் டிரைவர் எங்களிடம் ஒப்படைத்தார். அந்த டூவீலரின் லாக்கரில் 9 எம்எம் பிஸ்டல் ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியும் அதில் பயன்படுத்தக்கூடிய 7 ரவுண்டு புல்லட்டுகளும் இருந்தன. உடனடியாக விசாரித்தபோது அது சென்னையில் பணியிலிருக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவருடையது என்று தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்துவருகிறோம். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரும் அதே மாடல், ரெட் கலர் டூவீலர் வைத்துள்ளார். சம்பவத்தன்று அவரின் வீட்டிலிருந்து ஒருவர் வில்லிவாக்கம் மார்க்கெட்டுக்கு டூவீலரில் வந்துள்ளார். இரண்டு டூவீலர்களும் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து வந்தவர், டூவீலரை மாற்றி எடுத்துச் சென்றுவிட்டார். சற்குணம், மீனை வைக்க லாக்கரைத் திறந்தபோதுதான் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. நல்லவேளை சமூகவிரோதிகளிடம் சிக்கியிலிருந்தால் இன்ஸ்பெக்டருக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கும்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``தமிழக காவல்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி என்பதை கண்டுபிடித்துவிட்டோம். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த ராஜமங்கலம் போலீஸாரிடமும் முழு விவரங்களை கேட்டுள்ளோம். இந்த வழக்கை விசாரித்தவர்களும் சரியாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடமும் விளக்கம் கேட்டுள்ளோம்" என்றார். 

போலீஸார் சொல்லும் தகவலில் சில முரண்பாடுகள் உள்ளன. ஒரே மாடல், ஒரே நிற டூவீலர் என்றாலும் சாவிகள் வித்தியாசப்படும். இதனால், டூவீலர்கள் மாறிய விவகாரத்திலும் புல்லட்களுடன் துப்பாக்கி கிடைத்த தகவலிலும் போலீஸார் சொல்லும் தகவல்களில் சில நம்பும்படியாக இல்லை. துப்பாக்கி கிடைத்த சம்பவம் வெளியில் தெரிந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் தர்மசங்கடத்தில் உள்ளனர். இதற்கிடையில் துப்பாக்கியைத் தொலைத்த இன்ஸ்பெக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாறியது டூவீலர்ஸ்; சிக்கியது இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி!- அதிர்ச்சியில் மீன்வாங்க வந்தவர் 

யார் அந்த இன்ஸ்பெக்டர் என்று விசாரித்தபோது, சமீபத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லையென்று வேலையை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தவர்தான் அந்த இன்ஸ்பெக்டர். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், வேலை பார்ப்பதில் கில்லாடி என்றாலும் அவரின் கவனக்குறைவு காரணமாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டூவீலருக்குள் புல்லட்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி வைத்திருந்த இன்ஸ்பெக்டர்,  அதை ஏன் பாதுகாப்பாக வைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை மூடிமறைக்கும் வேலையில் ராஜமங்கலம் போலீஸார் ஈடுபட்டனர். 

இந்தச் சம்பவத்தில் ராஜமங்கலம் போலீஸார், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தச் சம்பவம் சென்னை காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vikatan