Published:Updated:

`பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை' - உ.பி-க்கு அதிர்ச்சி கொடுத்த 16 வயதுச் சிறுமி

சிறுமி
சிறுமி ( மாதிரி புகைப்படம் )

``பயத்தால் சிறுமியின் குடும்பம் காவல்துறையிடம் புகார் அளிக்காமல் இருந்துள்ளது. மேலும், மருத்துவமனைக்கும் அவர்கள் செல்லவில்லை. கடந்த ஜனவரி மாதம் சிறுமிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.”

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் பகுதியில் குளம் ஒன்றின் அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தையின் உடலைக் காவல்துறையினர் கடந்த ஜனவரி 31-ம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அப்பகுதியிலுள்ள 16 வயதுச் சிறுமி கர்ப்பமாக இருந்தார் என்றும் இதனால் அவர் கடந்த 5 மாதங்களாக வீட்டிலிருந்து வெளியே வருவதில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் வசிக்கும் சிறுமி, அவரின் தாயாரிடம் காவல்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், இதை வதந்தி என்று மறுத்துள்ளனர்.

குழந்தை
குழந்தை
மாதிரி புகைப்படம்

காவல்துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் சிறுமியின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகாரிகள் பேசும்போது, ``சிறுமி சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியிலுள்ள 30 வயது நபர் ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதன்பின்னர் தான் கர்ப்பமானதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டுமென அந்த நபர் மிரட்டியுள்ளார். பயத்தால் சிறுமியின் குடும்பம் காவல்துறையிடம் புகார் அளிக்காமல் இருந்துள்ளது. மேலும், மருத்துவமனைக்கும் அவர்கள் செல்லவில்லை. கடந்த ஜனவரி மாதம் சிறுமிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது” என்றனர்.

`மாணவியை ஏமாற்றிய காதலன்; வீடியோவை வைத்து மிரட்டிய நண்பன்!'- நாகையில் போக்ஸோ சட்டத்தில் இருவர் கைது

பிறந்த குழந்தையைக் கொன்று பின்னர் உடலைத் துணியில் சுற்றி குளத்தில் எறிந்ததாகக் காவல்துறையினரிடம் தாயும் மகளும் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடலில் அதிக காயங்கள் இருந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமி, அவரின் தாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். கொலை வழக்கின்கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியை சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும் தாய் மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி
சிறுமி
மாதிரி புகைப்படம்

சிறுமி அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அந்த சந்தேக நபரின் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.என்.ஏ பரிசோதனை நடத்த உள்ளதாகவும் பின்னர் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அந்த நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட 16 வயது சிறுமி... சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி!
அடுத்த கட்டுரைக்கு