Published:Updated:

டியூஷனுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சிறுமிமீது துப்பாக்கிச்சூடு! - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

துப்பாக்கிச்சூடு

பீகாரில் 16 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டியூஷனுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சிறுமிமீது துப்பாக்கிச்சூடு! - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

பீகாரில் 16 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு

பீகார் மாநிலம், பாட்னாவில் 16 வயது சிறுமி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். சிறுமி எப்போதும் அதிகாலை டியூஷனுக்குச் சென்றுவிட்டு காலை 8 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை டியூஷன் முடிந்து பீர் நகர் காவல் நிலையத்தின் சிபாரா பகுதி வழியாக சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது இளைஞர் ஒருவர் சுவரின் பின்னால் ஒளிந்துகொண்டு அந்தச் சிறுமி கடந்து சென்ற பிறகு அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார். துப்பாக்கிக் குண்டு அந்தச் சிறுமியின் கழுத்தில் பாய்ந்ததால் அவர் அங்கேயே மயக்கமடைந்தார். சத்தம் கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

துப்பாக்கிச்சூடு சம்பவம்
துப்பாக்கிச்சூடு சம்பவம்

சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முழுவதும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதனடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.