Published:Updated:

திண்டுக்கல்: குடி போதையில் தகராறு செய்த தந்தை... ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த சிறுவன்!

கொலை

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: குடி போதையில் தகராறு செய்த தந்தை... ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த சிறுவன்!

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஓமந்தூரான். இவர் கேரளாவில் 20 ஆண்டுகளாக ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தன் மனைவி பாண்டீஸ்வரி, மகன் மற்றும் மகளுடன் சத்திரப்பட்டியில் வசித்து வந்தார். குழந்தைகள் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்தனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

கேரளாவில் தங்கியிருக்கும் ஓமந்தூரான் வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து குடும்பத்தைப் பார்த்து செல்வார். இந்நிலையில் நேற்று இரவு ஓமந்தூரான் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி பாண்டீஸ்வரி பெயரில் திண்டுக்கல்லில் உள்ள வீட்டை விற்பது தொடர்பாக பேசியுள்ளார். இதற்கு பாண்டீஸ்வரி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறியதில் ஆத்திரமடைந்த ஓமந்தூரான், மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளார். தன் தந்தை தாயார் மற்றும் தங்கையை அடிப்பதை கண்டு, சிறுவன் தடுக்க முயன்றுள்ளான். அப்போது ஓமந்தூரான் அந்தச் சிறுவனையும் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் அவர் தலையில் தாக்கியுள்ளான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவல் நிலையம்
காவல் நிலையம்

இதில் படுகாயமடைந்த ஓமந்துரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் நள்ளிரவு 2 மணி வரை வீட்டிலேயே இருந்துள்ளனர். இதையடுத்து போலீஸாரிடம் சரணடைவது தான் சரியாக முடிவு எனப் பேசி ஓமந்தூரான் மனைவி, தன் மகளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, மகனை கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பதினாறு வயது சிறுவன் சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்து கையில் கிரிக்கெட் மட்டையுடன் வருவதைப் பார்த்த போலீஸார் திகைத்தனர். இதையடுத்து நடந்ததைக் கூறி போலீஸாரிடம் சரணடைந்தார். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism