Published:Updated:

கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள் - ம.பி-யில் நடந்த கொடூரம்

ஆ.பழனியப்பன்
ராம் பிரசாத்
கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள் - ம.பி-யில் நடந்த கொடூரம்
கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள் - ம.பி-யில் நடந்த கொடூரம்

மத்தியப்பிரதேசத்தில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது சகோதரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள் - ம.பி-யில் நடந்த கொடூரம்

மத்தியப்பிரதேச மாநிலம் ராவாத் கிராமத்தைச் சேர்ந்த குல்தீப் ராஜ்வத் - புல்புல் இருவரும் காதலித்துவந்துள்ளனர். இந்த விவகாரம்  அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரியவர, கடுமையாக எதிர்த்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்குக் காரணம்.  பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தவர்கள். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினர்.  கோயிலில் திருமணம் செய்துக்கொ்ண்டவர்கள் பின்னர் திருமனத்தை பதிவு செய்துள்ளனர். 

 அதன்பின்னர், அந்த கிராமத்திற்கு அவர்கள் திரும்பி வரவில்லை. இந்த நிலையில், புல்புல் கர்ப்பமாகியுள்ளார். குல்தீப்பின் வீட்டில் இவர்களை ஏற்றுக்கொள்வதாக கூறியதையடுத்து இருவரும் 8 மாதங்களுக்குப் பிறகு, தங்களது சொந்த கிராமத்திற்குத் திரும்பினர். குல்தீப்பின் வீட்டில் இவர்கள் இருந்துள்ளனர். அங்கு வந்த புல்புல்லின் சகோதரர்களான கார்த்திக் மற்றும் சுப்மான் இருவரும் கர்ப்பிணி என்றுகூட பாராமல் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிக் குண்டுகள் நெற்றியைத்  தாக்கியதில், அந்த இடத்திலேயே அவர் சுருண்டுவிழுந்தார்.
 
சம்பவத்தின் போது  குல்தீப் வீட்டில் இல்லை அவரது தாயார் மட்டுமே இருந்துள்ளார். சகோதரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சகோதர்கள் இருவரும்  காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

“தன் சகோதரி வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதால் அவரின் குடும்பத்துக்கு அவமானமாகிபோய்விட்டது, அதனால் தங்கள் சாதிக்காரர்கள் குடும்பத்தை ஏளனம் செய்துவந்தனர். அந்த வெறுப்பில்தான் சகோதரியைச் சுட்டுக்கொன்றேன்” அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளான்” என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் மீனா கூறியுள்ளார்.

Vikatan