Published:Updated:

நள்ளிரவு திக்... திக்... முட்டையைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நள்ளிரவு திக்... திக்... முட்டையைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம்!
நள்ளிரவு திக்... திக்... முட்டையைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம்!

நள்ளிரவு திக்... திக்... முட்டையைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியில், நள்ளிரவில் பெண் பத்திரிகையாளர்மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு திக்... திக்... முட்டையைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம்!

நொய்டாவில் இயங்கும் செய்திச்சேனல் ஒன்றின் பத்திரிகையாளராக இருப்பவர், மிதாலி சந்தோலா. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வேலையை முடித்து, தனது காரில் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, ஒரு மருத்துவமனை அருகே அவர் வந்த காரை முந்திச் சென்றள்ளது இன்னொரு கார். அதில், முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், திடீரென மிதாலியின் கார்மீது முட்டைகளை வீசியுள்ளனர். இதில் பயந்த மிதாலி, தனது காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். தொடர்ந்து விரட்டிச்சென்ற மர்ம நபர்கள், துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டுள்ளனர்.  அதில், நெத்தியிலும் கைகளிலும் குண்டுகள் பாய, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

நள்ளிரவு திக்... திக்... முட்டையைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம்!

பின்னர், அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அவரை அனுமதிக்க, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவருகிறார். அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு