Published:Updated:

பெண் வழக்கறிஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் மரணம் - நீதிமன்றத்தில் நிகழ்ந்த கொடூரம்! 

ஜெனிஃபர்.ம.ஆ

தர்வேஷ் யாதவ், உத்தர பிரதேச மாநிலத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நாளே இந்தச் சம்பவம் நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

பெண் வழக்கறிஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் மரணம் - நீதிமன்றத்தில் நிகழ்ந்த கொடூரம்! 
பெண் வழக்கறிஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் மரணம் - நீதிமன்றத்தில் நிகழ்ந்த கொடூரம்! 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நீதிமன்றத்தில், தர்வேஷ் யாதவ் என்ற பெண் வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்ட ஆண் வழக்கறிஞர் மனிஷ் சர்மா, தன்னையும் சுட்டுக் கொண்டதால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பெண் வழக்கறிஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் மரணம் - நீதிமன்றத்தில் நிகழ்ந்த கொடூரம்! 

தர்வேஷ் யாதவ், உத்தர பிரதேச மாநிலத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நாளே இந்தச் சம்பவம் நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்வேஷ் யாதவ், அவருடைய பாராட்டு விழாவையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூத்த வழக்கறிஞர் அரவிந்த் மிஸ்ரா என்பவரது அறையில் இருந்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள், நண்பர்கள் புடை சூழ தர்வேஷ் யாதவ் அங்கிருந்த போது, திடீரென உள்ளே வந்த வழக்கறிஞர் மனிஷ் சர்மா, தான் உடன் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டதில், தலையிலும் வயிற்றிலும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே தர்வேஷ் யாதவ் மரணமடைந்தார். அவரைச் சுட்டதும் மனிஷ் சர்மா, துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இதனால் சில நாள்கள் கோமாவில் இருந்த மனிஷ் சர்மா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

இந்தச் சம்பவத்தில், எதிர்க்கட்சிகள் வலுவான கண்டனங்களைத் தெரிவிக்க அரசாங்கம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது, முதற்கட்ட விசாரணையில், தர்வேஷ், மனிஷ் இடையே இருந்த பழைய பகையின் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது, தொடக்கத்தில் நல்ல நண்பர்களாக இருந்த இருவரும், தொழில் முறை போட்டி காரணமாகச் சற்று விலகியிருக்கிறார்கள். ஆனால், கொலை செய்யும் அளவிற்கு மனிஷ் கோபமடைய என்ன காரணம் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை, தர்மேஷ் யாதவின் வெற்றி குறித்த காழ்ப்புணர்வு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பெண் வழக்கறிஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் மரணம் - நீதிமன்றத்தில் நிகழ்ந்த கொடூரம்! 

மனிஷ் ஷர்மா, உரிமம் பெற்ற துப்பாக்கியையே பயன்படுத்தி இருக்கிறார். துப்பாக்கிகளில் குண்டு நிரப்பிய பின்னரே அவர் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார். தர்மேஷ் யாதவின் அருகிலிருந்த அவரது உறவினரையும் மனிஷ் ஷர்மா சுடுவதற்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இவற்றிற்கான காரணங்களாகக் குறிப்பிட்டு எதையும் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திலேயே பெண் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, பணியில் இருக்கும் பெண்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 

Vikatan