Published:Updated:

நேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர்! - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்

நேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர்! - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்
நேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர்! - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் நேரலையில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர்! - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்

பாகிஸ்தானின் பாக் நியூஸ் நெட்வொர்க் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற நேரலை விவாத நிகழ்ச்சி அது. பொதுவாக விவாத நிகழ்ச்சிகளில் கட்சி சார்பாகப் பேச வரும் நபர்கள் சமயத்தில் டென்ஷன் ஆகிவிடுவது நடக்கும். இந்திய சேனலிலும் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. 

நேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர்! - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்

ஆனால், பாகிஸ்தானில் நடந்த விவாதத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான மஸ்ரூர் அலி சியால் கலந்துகொண்டார். காரசாரமாக நடந்த விவாதத்தின்போது டென்ஷன் ஆன அவர் காட்டமாகப் பதிலளித்து வந்தார். 

அப்போது நடுவில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் இம்டிஸ் கான் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார். அவரைக் கீழே தள்ளிவிட்டு கடுமையாகத் தாக்கினார். இந்தத் தாக்குதலில் கான் நிலைகுலைந்துபோனார். அப்போது நிகழ்ச்சியில் பேச வந்திருந்த மற்ற பேச்சாளர்கள் இருவர் வந்து அவர்களைப் பிரித்து சமாதானம் செய்தனர். 

நேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர்! - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்

இந்தச் சம்பவம் நடந்தபோது நிகழ்ச்சி நேரலையில்தான் இருந்தது. அடுத்த நிமிடமே எதுவும் நடக்காததுபோல் நெறியாளர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார். கான், கராச்சி பிரஸ் கிளப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மஸ்ரூர் அலி சியாலின் செயல் கண்டிக்கத்தக்கது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியே சமூக வலைதளம் முழுவதும் செம வைரல் ஆகியுள்ளது. பலர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டேக் செய்து. மஸ்ரூர் அலி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Vikatan