Published:Updated:

வேதனையைத் தீர்க்குமா புதிய அறிவிப்பு?

கண்ணீருடன் கடலூர் மக்கள்!

வேதனையைத் தீர்க்குமா புதிய அறிவிப்பு?

கண்ணீருடன் கடலூர் மக்கள்!

Published:Updated:
##~##

டலூர் மக்களுக்கு 790 கோடி மதிப்புக்கு திட்டங்களை அறிவித்து அவர்களின் மறு வாழ்வுக்கான முயற்சிகளைத் தொடங்கி​விட்டார் முதல்வர்! 

தானே புயலில் சிக்கி வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தமிழக சட்டசபையில் கடந்த 4-ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதனையைத் தீர்க்குமா புதிய அறிவிப்பு?

790 கோடிக்கு வேளாண் சிறப்புத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.  இந்த அறிவிப்பு பற்றி, கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ரவீந்திரன், ''புதிதாக நடப்படும் முந்திரி, மா மற்றும் தென்னங்கன்றுகளுக்கு ஒரு வருடமாவது பராமரிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்று,  கோரிக்கை வைத்தோம். ஆனால், அதையும் தாண்டி, ஐந்து வருடங்களுக்குப் பராமரிப்பை ஏற்று விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளது அரசு. புயல் பாதித்த மாவட்டமாக கடலூரை அறிவித்து நில வரியை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறோம்.

வேதனையைத் தீர்க்குமா புதிய அறிவிப்பு?

மேலும், சாகுபடிக்கு ஏற்ப விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தருவதாக அறிவித்து

வேதனையைத் தீர்க்குமா புதிய அறிவிப்பு?

இருப்பதையும் நெகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். இப்போது, வீழ்ந்துகிடந்த மரங்களை அகற்றுவதற்காக தென்னை மரங்களுக்கு 500 ரூபாயும் மற்ற மரங்களுக்கு ஹெக்டேருக்கு 6,000 ரூபாய் வீதம் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளதை மனதார வரவேற்கிறோம். நீண்டகாலப் பயிர் சாகுபடிக்கு இடையே விவசாயிகள் விரும்பும் ஊடுபயிர் சாகுபடிக்கு ஐந்து ஆண்டுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பதாக அரசு அறிவித்து இருக்கிறது. மேலும், ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு ஐந்து சதவிகித மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 25 சதவிகித மானியமும் அளித்து, மின் இணைப்பு கேட்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிபந்தனைகள் இன்றி மும்முனை மின் இணைப்பு வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், தென்னங்கன்றுகளை வளர்க்க ஹெக்டேர் ஒன்றுக்கு 73 ஆயிரத்து 859 ரூபாய் வழங்குகிறார்கள். இப்போது வழங்கப்படும் நிவாரணத் தொகை முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டாலும், தேசிய இயற்கைப் பேரிடர் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வழங்கப்படுகிறது. சாகுபடி செலவுத் தொகைக்கு ஒப்பிடும்போது நிவாரணத் தொகை குறைவாக இருந்தாலும்... அதை ஈடு செய்யக்கூடிய வகையில்

வேதனையைத் தீர்க்குமா புதிய அறிவிப்பு?

இப்போது நடைமுறையில் உள்ள பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தின் விதிகளைத் தளர்த்தி, அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களுக்கு முழுமையாக காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான பிரீமியத் தொகையை 90 சதவிகிதம் அரசும் 10 சதவிகிதம் விவசாயிகளும் செலுத்தும் வகையில் வழிவகை செய்யவேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்ததும் உழுவதற்குத் தயாராகி விட்டோம். இனி, நாங்கள் கடுமையாக உழைப்போம். எங்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் அம்மாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்'' என்றார்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் வெங்கடபதியோ, ''பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் காலங்களில் வழங்கப்படும் அன்னவாரியச் சான்றினை அரசு அளித்திருந்தால், நிலவரி தானாகவே ரத்தாகிவிடும். வங்கிக் கடன்களும் எளிதில் கிடைத்துவிடும். இப்போது, குறுகிய காலக் கடன் மத்தியக் கடனாகவும், மத்தியகாலக் கடனை நீண்ட காலக் கடனாகவும் அறிவித்திருப்பது, விவசாயிகளுக்கு மேலும் வட்டி சுமையைத்தான் ஏற்றும். அதை முழுமையாகத் தள்ளுபடி செய்திருந்தால், பெரிய உதவியாக இருந்திருக்கும். முந்திரி விவசாயிகளின் குழந்தைகளுடைய மேற்படிப்பை குறைந்தது ஒரு வருடத்துக்காவது அரசு ஏற்க வேண்டும். கடலூர் மாவட்டத்தைப் புயல் பாதித்த மாவட்டம் என்று சொல்வதைவிட, நிரந்தரப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை, குழாய் வழியாக பண்ருட்டி பகுதிக்குக் கொண்டுவந்து, முந்திரி விவசாயிகளுக்குப் பயன்பெறும் விதமாக செயல்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கைகளை அடுக்கினார்.

இவற்றையும் நிறைவேற்ற அரசு முயற்சி செய்யட்டும்!

- க.பூபாலன்

படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism