Published:Updated:

நல்லதொரு ஆரம்பம்!

துணைவேந்தர் நியமனம்

நல்லதொரு ஆரம்பம்!

துணைவேந்தர் நியமனம்

Published:Updated:
##~##

ட்டாசு வெடித்துக் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள் கல்வியாளர்கள். காரணம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்​கழகத் துணைவேந்தர் தேர்வு முறை​தான்! 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்​கழகத்தின் துணைவேந்தர் ம.ராசேந்​திரன் ஓய்வு பெற்றதும், புதிய துணை​வேந்தரைத் தேர்ந்து எடுக்கக் குழு அமைக்கப்பட்டது. ஓர்ஆண்டு கடந்துவிட்ட நிலையில், கடந்த 8-ம் தேதி, துணைவேந்தராக பேராசிரியர் திருமலையை நிய​மித்து, ஆளுநர் ரோசய்யா உத்தர​விட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தடை பல கடந்து இந்த நியமனம் நடந்திருக்கிறது...'' என்று சொல்லும் உயர்கல்வித் துறை அதிகாரிகள், ''ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத் தரப்பு பிரதிநிதியாக சென்னைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் தாண்டவன் நியமிக்கப்பட்டார். மூன்று மாதங்களில் அவர், தேர்வுக் குழுவில் இருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக கரூர் அரசுக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோகரன் நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பரில்

நல்லதொரு ஆரம்பம்!

நடந்திருக்க வேண்டிய முதல் கூட்டம், டிசம்பர் 16 அன்றுதான் நடந்தது. அதே டிசம்பரில் நடக்கவேண்டிய இரண்டாவது கூட்டமும் தள்ளிப்​போனது.  

ஒரு வழியாக ஜனவரி 30-ம் தேதி குழு கூடியது. மொத்தம் 30 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். மன்னார்குடி வட்டாரத்தில் இருந்து இரண்டு பேருக்குப் பரிந்துரை செய்யப்பட்டு

இருந்தது. தேர்வுக் குழுவினர் அவற்றை நிராகரித்து விட்டனர். அதில், ஒருவர் மைசூரில்  பணியாற்றுபவர். ஒன்பது ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.  இன்னொருவர், தஞ்சைக் கல்லூரி  ஆசிரியர். ஐந்து ஆண்டுகளே அனுபவம் உள்ளவர். அடுத்து அரசு செயலாளர்  ஒருவர் மூலம் வந்த பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது.  

இப்படிப் பலரையும் கழித்துக் க​ட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரா​சிரியர் ராமசாமி, சென்னைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற

பேரா​சிரியர் தெய்வசுந்தரம், காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமலை ஆகிய மூவரையும் தேர்வு செய்து, ஆளுநரிடம் சமர்ப்பித்தனர் தேர்வுக் குழுவினர். இதில், ஓர் உறுப்பினர் மட்டும், '10 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம் என்பது கடந்த காலங்களில் பின்பற்றப்படவில்லை. அதைப் போலவே இந்த முறையும் செய்திருக்கலாம்’ என்று மாற்றுக் கருத்தை எழுதியதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும், பெரும்பான்மையினர் கருத்துப்படி மூவர் பட்டியலை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை மாற்றி, துணைவேந்தர் தேர்வில் நல்ல தொடக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடரவேண்டும்'' என்று எதிர்பார்ப்பைச் சொன்னார்கள்.

அடுத்து, காமராசர், மனோன்மணியம், திரு

வள்​ளுவர், அன்னை தெரசா மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!  

- இரா. தமிழ்க்கனல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism